பிரபல நடிகர்களுக்கு பதிவுத்துறை நோட்டிஸ்
தென்னிந்திய நடிகர் சங்கத்தை நடிகர் நாசர் தலைமையிலான குழுவினர் நிர்வகித்து வந்தனர். அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் நடிகர் சங்கம் முறையாக செயல்படாதது குறித்தும், தனி அதிகாரிகள் நியமனம் குறித்தும் முன்னாள் செயலாளராக இருந்த விஷால் , மற்றும் தலைவராக இருந்த நாசர் ஆகியோருக்கு பதிவுத்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.











