சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகப்படுத்தும் பிரபல இசையமைப்பாளர் ‼
இயக்குநர் ரத்ன சிவா இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகும் படம் ‘சீறு’. காதல், ஆக்ஷன் கலந்த கமெர்ஷியல் படமாக உருவாகும் இந்தப் படத்தில், பிரபல பாடகர் சங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்கிறார் இமான். இது குறித்து இமான் தனது சமூக வலைதள பக்கத்தில், “சங்கர் மகாதேவனின் மகனை பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. அவர் பாடிய பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.











