வேட்டி கட்டுவதை பிரதமர் மோடி தொடர வேண்டும்- கவிப்பேரரசு வைரமுத்து
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து சந்தித்தார் அப்போது அவர், திருவாரூரில் அமைய உள்ள கலைஞர் அருங்காட்சியகத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கலைஞர் பிறந்த மண்ணில் அவருக்கு அருங்காட்சியகம் அமைக்கும் பணியை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அது தொடர்பான சில கருத்துகளை அவரிடம் கூறி உள்ளேன். பிரதமர் மோடி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டியது நன்றாக இருந்தது, அதை அவர் தொடர வேண்டும்” என்று கூறினார்.











