கலைமாமணி விருதை பெற்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !*

கடந்த 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

அப்போது 2017ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார்.

அதேபோல், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

CLOSE
CLOSE
error: Content is protected !!