ஒவ்வொரு புதிய திரைப்படமும் எனக்கு ஒரு பாடமே – கமல்ஹாசன்
ஒடிஷாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த பட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கமல்ஹாசனிடம் வழங்கினார். பின்னர் உரையாற்றிய கமல்ஹாசன், வாழ்க்கையில் சிறிய சிறிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் என்றும், சிறிய இலக்குகளை அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றினால் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்றும் கூறினார். மேலும் ஒவ்வொரு புதிய திரைப்படமும் தனக்கு ஒரு பாடமே என்று கமல்ஹாசன் கூறினார்.











