கோடையை தெறிக்க விட வரும் திரைப்படங்கள் தளபதி விஜய் சூர்யா சியான் விக்ரம் தனுஷ்
தீபாவளி, பொங்கலை போன்று கோடை விடுமுறையும் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
படமே பார்க்காதவர்கள் கூட கோடை விடுமுறையில் நிச்சயம் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்காக பெரிய படங்களை வெளியிட காத்திருப்பர் தயாரிப்பாளர்கள்.
இந்தாண்டு 2020 கோடை விடுமுறையில் தளபதி விஜய், நடிகர் சூர்யா, தனுஷ், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் சியான் விக்ரம் ஆகியோரத்து திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இருவரும் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.
இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் மே மாதம் முதல் தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த திரைப்படமும் கோடையில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Movie:
கோப்ரா, சூரரைப் போற்று, ஜகமே தந்திரம், மாஸ்டர்











