‘சக்ரவியூகம்’ என்ற குறும்படத்தை வெள்ளித்திரையில் இயக்கவுள்ளராம் இயக்குநர் சந்தோஷ்குமார்
சந்தோஷ்குமார் ‘க்ளீன் போல்ட்’ குறும்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சந்தோஷ்குமார். அதில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால்ஆதிராஜை வைத்து எடுத்த ‘சக்ரவியூகம்’ குறும்படத்துக்கு சமூக
வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து விருதுகள் வாங்கியிருப்பதுடன் பிரபல சினிமா நிறுவனத்திடமிருந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பும் வந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சந்தோஷ்குமார் கூறியது, ‘‘எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர். சினிமா பின்னணி எதுவும் கிடையாது. படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. சினிமா ஒரு ரசிகராகத்தான் அறிமுகம். எம்.பி.ஏ. படிக்கும்போது சக நண்பர் ஒருவர் டிஜிட்டல் கேமராவைத்திருந்தார். அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்ள
விளையாட்டாக நண்பர்களை வைத்து ஒரு வீடியோ எடுத்தேன். அந்த வீடியோவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சிலர் ‘குறும்படம் ட்ரை பண்ணலாமே என்றார்கள். அப்போது நான் ஸ்டூடண்ட் என்பதால் கையில் பணம் இல்லாததால் அந்த முயற்சியை அப்படியே ஓரங்கட்டி வைத்துவிட்டேன்.
பிறகு வேலைக்குப் போனதும் மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள் எடுக்கும் முயற்சியில் இறங்கினேன். முதல் முயற்சியாக ‘க்ளீன் போல்ட்் ‘எடுத்தேன். அதற்கு ஒரு மில்லியன் வியூஸ் கிடைத்தது. தொடர்ந்து ‘நெமிசிஸ்’(nemesis), ‘அத்தியாயம்’ என்று பல ஜானர்ல ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன்.தற்போது வெளிவந்துள்ள ‘சக்ரவியூகம்’ சைபர் இன்வெஸ்டிகேஷன் பற்றிய கதை. நகரில் சில கொலைகள் நடக்கிறது. அதுவும் செலக்டிவ்வாக நடக்கிறது. கொலையாளி யார்? கொலைகாரன் யார்? என்பதை ஒரு முழு சினிமாவுக்கான விறுவிறுப்புடன் சொல்லியுள்ளேன்.
துப்பறியும் அதிகாரியாக விஜய் ஆதிராஜ் நடித்துள்ளார். அவர் எங்கள்குறும்படத்தில் நடித்தது மறக்க முடியாதது. விஜய் ஆதிராஜ் சார் எனக்கு முகநூலில் அறிமுகமானார். நாங்கள் வேலைக்குப் போகிறவர்கள் என்று தெரிந்ததும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அவருக்காக ஸ்பெஷல் உணவு ஆர்டர் செய்தாலும் ‘நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ அதுவே போதும்’
என்றார். அதே மாதிரி தங்கும் விஷயத்திலும் சாதாரண ஓட்டல் போதும் என்று சொல்லிவிட்டார்.

என்னுடன் வேலை செய்யும் ப்ரீத்தியும் இன்னொரு லீட் கேரக்டரில் நடித்துக்
கொடுத்தார். கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளவர்கள் என்னுடைய நண்பர்கள் நான் கேட்டதும் உடனே ‘சரி’ சொல்லி படப்பிடிப்புக்கு வந்தார்கள்.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவாளர் ஜிக்கு ஜாக்கோப் பீட்டர், இசையமைப்பாளர் ஸ்டேன்லி சேவியர், எடிட்டர் பிரேம் சாய் ஆகியோர் பிரமாதமான ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். குறும்படமாக இருந்தாலும் காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுத்தோம்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் படப்பிடிப்பு நடக்கும். நண்பர்கள் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் சப்போர்ட் இல்லாமல் என்னால் இவ்வளவு குறும்படங்கள் பண்ணியிருக்க முடியாது. அவர்களுடைய தொடர் ஆதரவால்தான் என்னுடைய சினிமா பயணம் சாத்தியமானது.
செய்து கொடுத்தார்.
குறும்படங்கள் மூலம் முழு சினிமாவை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. தற்போது அதற்கான முயற்சியில் உள்ளேன். பிரபல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கதை சொல்லியுள்ளேன். க்ரீன் சிக்னலுக்காகக்காத்திருக்கிறேன்’’
Related posts:
நான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும், புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்தான் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.
விஜய் சார் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நடிகை ஆஷிமா நர்வால் பேட்டி
தமிழ் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி – இயக்குநர் அபிலேஷ்
நடிகர் தளபதி விஜய் வீட்டில் ரெய்டுக்கு இதுதான் காரணம் இயக்குநர் அமீர்.
கொரானா காலக்கட்டத்தில் செக்யூரிட்டி என்ற குறும்படத்தை முதன் முறையாக இயக்கி நடித்துள்ளேன். இது நம் தாய் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓர் அர்பணிப்பு.
நடிகர் போஸ் வெங்கட் முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்”
நமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். ‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி
மருத்துவமனை, சிசிடிவி கேமரா, இட்லி சாப்பிட்டார் என்ற காட்சிகள் தணிக்கைக் குழுவைத் தாண்டி எப்படி வந்தது.. K.பாக்கியராஜ் பேச்சு.
நான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா
தனது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன் புதுமுகம் நடிகை சந்திரிகா.

