பத்துதல திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.!!!

சென்னை 21 ஆகஸ்ட் 2022 பத்துதல திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.!!!

பத்துதல’ திரைப்படத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் சமீபத்தில் மஹா திரைப்படம் வெளியாகியிருந்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிலம்பரசன் டிஆர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சிலம்பரசன் டிஆர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது.

இதில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது.

இதனையடுத்து மற்றொரு திரைப்படமான பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏற்கனவே தமிழ் திரைப்படம் டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையில் உடல் நலக்குறைவால் தந்தை இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் பத்து தல திரைப்படத்தின் சிலம்பரசன் டிஆரின் காட்சிகள் படமாக்குவது தாமதமானது.

சமீபத்தில் சென்னை திரும்பிய அவர் கடந்த மாத இறுதியில் ‘பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்று வந்த ‘பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக இயக்குநர் கிருஷ்ணா சிலம்பரசன் டிஆர் மற்றும் கௌதம் கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

இதனிடையே சிலம்பரசன் டிஆர் படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பியதால்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த தகவலை திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணா மறுத்து விளக்கம் அளித்து, திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை,

அடுத்ததாக மதுரை மற்றும் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ நடிகர் சிம்பு குழந்தை ஒன்றை மடியில் வைத்து நாற்காலியில் உட்கார்ந்திருக்க, பின்னால் மலையாள நடிகை அனு சித்ரா நின்று கொண்டிருக்கிறார்’ இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.