6 கண்களும் ஒரே பார்வை திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ராஜ்நிதன், கெனி, வாசுவிக்ரம், கும்கி ஆனந்தி, அமிர்தலிங்கம், ஆதவன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜடையனூர் V. ஜானகிராமன்.

ஒளிப்பதிவாளர் :- சீனிவாசன்.

படத்தொகுப்பாளர் :- T பன்னீர் செல்வம்.

இசையமைப்பாளர் :- பிருத்திவி – ஆரோன்.

தயாரிப்பு நிறுவனம் :- சுப்ரியா பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- ஜடையனூர் V. ஜானகிராமன்.

ரேட்டிங் :- 2.5/5.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கதாநாயகி கெனி தந்தையை இழந்த தாயின் அரவணைப்பில் கல்லூரியில் படித்து வருகிறார்.

கதாநாயகி கெனியை மூன்று இளைஞர்கள் காதலிக்கிறார்கள்.

ஆனால், மொத்த ஆண்களையும் வெறுக்கும் கதாநாயகி கெனி, அந்த மூவரையும் கண்டு கொள்ளாமல் தனது பணியை செய்து வருகிறார்.

திடீரென ஒரு நாள் கதாநாயகி கெனியின் தாய் ரோட்டில் மயங்கி விட அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டர் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்.

அந்த ஆப்பரேஷனுக்கான செலவு மூன்று லட்ச ரூபாய் ஆகும் என டாக்டர் கூறுகிறார்கள்.

சொந்தம் பந்தம் அனைவரிடம் தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவை என அனைவரிடம் கேட்க கதாநாயகி கெனிக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.

இந்த நிலையில் தன்னை காதலிக்கும் மூவரையும் காதலிப்பதாக கூறி தாயின் மருத்துவ செலவுக்காக ஒவ்வொருவரிடமும் தலா ஒரு லட்சம் வாங்குகிறார்.

கதாநாயகி கெனியின் தாய் நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து நலமுடன் வீடு திரும்புகிறார்.

அதன் பிறகு பணம் விஷயம் கதாநாயகி கெனியின் தாய்க்கு தெரியவர, “மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்” என கட்டாயப்படுத்துகிறார்.

ஆனால் கதாநாயகி கெனிக்கு ஆண்களை கண்டால் பிடிக்காது எனக்கு திருமணம் வேண்டாம் என மறுக்கிறார்.

ஆனால், மூவருமே, கதாநாயகி கெனியை தங்களைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என மூவரும் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த மூவரின் பிரச்சினைகளிலிருந்து கதாநாயகி கெனி யாரை திருமணம் செய்து கொண்டார் ஏமாற்றி வாங்கிய மூன்று லட்சத்தையும் ஒவ்வொருவரும் திருப்பி கொடுத்தாரா? கொடுக்கவில்லை? என்பதுதான் இந்த ஆறு கண்களும் ஒரே பார்வை திரைப்படத்தில் மீதிக்கதை.

இந்த ஆறு கண்களும் ஒரே பார்வை திரைப்படத்தில் கதாநாயகியாக கெனி நடித்துள்ளார்.

கதாநாயகி கெனி, எப்போதும் கண்களில் சோகத்தை தேக்கி வைத்து, கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து சிறப்பாக நடித்து ஆண்கள் மீது வெறுப்பாக பேசும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி கெனியின் இளமையான தாயாக வருகிறார் திவ்யா லெனின்.

பிளாஷ்பேக் காட்சிகளில் கதாநாயகியாக வரும் திவ்யா லெனின் வேலைக்காரனை நம்பி வந்து ஏமாறுவது, அவனிடமிருந்து தப்பிக்க உதவுவதாகச் சொல்லி இன்னொருவரிடம் ஏமாற்றப்பட்ட சோகம் அன்பு ஆண்கள் மீதான வெறுப்பு என மிகவும் சிறப்பாக நடித்து உள்ளார்.

மூவரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என் கதாநாயகி கெனியிடம் உறுதியாக கூறுவதும், தன் மகள் தற்கொலைக்கு முயலும் காட்சியில் பதறுவதும் துடிப்பதுமான காட்சிகளில் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகி கெனிக்கு பதில் திவ்யா லெலினை இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கலாம்.

இந்த சிறுவயதில் கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் திவ்யா லெலின் நடித்திருப்பது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சோகத்தை வரவழைக்கிறது.

வில்லனாக வரும் ஆதவன் அதிரடியாக வந்து நடிப்பின் மூலம் கவனிக்க வைத்திருக்கிறார்.

இந்த ஆறு கண்களும் ஒரே பார்வை திரைப்படத்தில் கதாநாயகனாக ராஜ்நிதன் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ராஜ்நிதன் கதாநாயகி கெனியை உயிருக்கு உயிராக உருகி காதலிக்கும் வருகிறார்.

தன் காதலி கதாநாயகி கெரியின் மறைவுக்கு பிறகு, அவரது தாயிடம் கொடுக்கும் பணத்தை மறுத்து உருக்கத்துடன் பேசும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார்.

ஒரு தலையாக கதாநாயகி கெனியை காதலிக்கும் கதாபாத்திரத்தில் வரும் மற்ற இருவரும்கூட, இயல்பாக நடித்து உள்ளனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாசு விக்ரம், அப்பாவி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிர்தலிங்கம், என அனைவரும் கதாபாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சீனிவாசனின் ஒளிப்பதிவு மொத்தத்தில் கதையை கெடுத்திருக்கிறது.

ஆரோன் இசை, பிரித்வியின் பின்னணி இசை, திரைப்படத்திற்கு மிகவும் சுமாராக அமைந்திருக்கிறது.

நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் இசை ஒளிப்பதிவு எடிட்டிங் எஃபெக்ட்ஸ் என அனைத்திலும் கவனம் செலுத்தி இருந்தால் மிகவும் நல்ல ஒரு திரைப்படமாக அமைந்திருக்கும்.

ஆறுகண்களும் ஒரே பார்வை வித்தியாசமான முறையில் இறுதி கட்ட காட்சிகளை சுவாரஸ்யமாக கொடுத்து மிக அருமையாக இயக்கியுள்ளார்  இயக்குநர் ஜடையனூர் வி. ஜானகிராமன்.

மொத்தத்தில் – இந்த ஆறு கண்களும் ஒரே பார்வை திரைப்படத்தை ஒருமுறை பார்வையிடலாம்.