இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷின் அடுத்த ஹாலிவுட் பாடல் ‘க்ரையிங் அவுட்’ நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்
‘சூரரைப் போற்று’ படத்தின் பின்னணி இசைக்காக பல்வேறு திரையுலகினருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வாழ்த்துகளோடு அடுத்த அதிரடி ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
ஹாலிவுட்டில் ‘லோல்ட் நைட்ஸ்’ என்ற ஆல்பத்தின் மூலம் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
அந்த ஆல்பத்தின் ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது.
அனைத்து பாடல்களுக்கான தளத்திலும் இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.
அந்தப் பாடல் பெரும் வைரலாகி வரவேற்பைப் பெற்றது. அதற்கு கிடைத்த வரவேற்பால் உலகளவில் பிரபலமான ஜஸ்டின் பீபர், ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் கணக்கைப் பின் தொடர்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தற்போது, ‘கோல்ட் நைட்ஸ்’ ஆல்பத்திலிருந்து அடுத்த பாடலுக்கு தயாராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். ‘க்ரையிங் அவுட்’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார்.
முதல் பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இசைத்தளங்களில் அடுத்தப் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‘க்ரையிங் அவுட்’ பாடல் நவம்பர் 19-ம் தேதி மாலை தனுஷ் வெளியிடவுள்ளார்.
நடிப்பு, படங்களுக்கு இசை ஆகிய பணிகளுக்கு இடையே, ‘கோல்ட் நைட்ஸ்’ ஆல்பத்துக்காக மிகவும் சிரத்தை எடுத்து பணிபுரிந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
‘க்ரையிங் அவுட்’ பாடலுக்குப் பிறகு இன்னும் பல பாடல்கள் உள்ளது.
அவை அனைத்துமே ஜி.வி.பிரகாஷை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்று உறுதியாக நம்பலாம்!