உலகநாயகனுடன் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் “கைகலா சத்ய நாராயணா” காலமானார்.

சென்னை 23 டிசம்பர் 2022 உலகநாயகனுடன் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் “கைகலா சத்ய நாராயணா” காலமானார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவரும், முன்னாள் எம்பியுமான பிரபல நடிகர் கைகலா சத்திய நாராயணா இன்று அதிகாலை காலமானார்.

நடிகர் கைகலா சத்ய நாராயணா தற்போது அவருடைய வயது 87

இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேலும் தமிழ், தெலுங்கு என 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

நடிகர் கைகலா சத்ய நாராயணா சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து இல்லம் திரும்பினார்.

இந்த நிலையில், 23. டிசம்பர் .2022 இன்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள
தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்