நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த ரசிகர்கள் !!

சென்னை 25 மே 2024 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி.

இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இன்று (மே 25 ஆம் தேதி) நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த இரத்த தானம் முகாமில் சுமார் 150 பேர் இரத்த தானம் செய்தார்கள்.
மேலும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறந்த 100 குழந்தைகளுக்கு உடை மற்றும் தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் கொடுத்து இருக்கிறார்கள்.
கார்த்தியின் ரசிகர்கள் கடந்த இரண்டு வாரங்களாக அன்னதானம், நீர் மோர் வழங்குதல், ஆகிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






Related posts:









