ஏற்காட்டில் நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் விஷ்வா விபத்தில் சிக்கினார்.!

சென்னை 26 பிப்ரவரி 2023 ஏற்காட்டில் நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் விஷ்வா விபத்தில் சிக்கினார்.!

புதுமுக இயக்குநர் கோபால் இயக்கத்தில் சண்டை இயக்குநர் ஃபயர் கார்த்திக்கின் சண்டை வடிவமைப்பில் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் விஷ்வா நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு ஏற்காட்டில் நடந்து வருகிறது.

ஏற்காட்டில் நடந்த அந்தப் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் எடுக்கும் போது மோட்டார் சைக்கிளிலிருந்து தாவி விழுகிற மாதிரி காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது கால் பிசகி நடிகர் விஜய் விஷ்வா கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு கையில் அடிப்படுக் காயம் ஏற்பட்டுள்ளது.