நடிகர் விஷாலை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்க உள்ள நிகழ்வு ஆந்திர அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

நடிகர் விஷாலை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்க உள்ள நிகழ்வு ஆந்திர அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

திரைப்படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு வருகிறார் நடிகர் விஷால்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட நடிகர் விஷாலுக்கு கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே நடிகர் விஷாலை சந்திக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பில் அணுகப்பட்டுள்ளது.

வரும் 2024ம் ஆண்டு ஆந்திராவில் தேர்தல் வர உள்ள நிலையில் இம்மாதம் 27ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி – விஷால் சந்திக்க உள்ள நிகழ்வு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.