கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்!

கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்!

சென்னை 01 ஏப்ரல் 2024 தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

அம்மா கதாபாத்திரம் என்றாலே ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய உலகநாயகன் கமல்ஹாசன் ஜோடியாக நாயகன், திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் ராம், கருத்தம்மா, தவமாய் தவமிருந்து, அஞ்சலி, பசுபொன், எம்டன் மகன்,  களவாணி, போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கலா பத்திரங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது பெண் ஒருவர் கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது

தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனின் மனைவியான இவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகரில் வசித்து வருகிறார்.

தெருவில் கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

நடந்த இந்த வாய்  தகராறில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கம்  காவல்நிலையத்தில் ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார்.

அதன்படி தற்போது சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.