“காவல்துறை உங்கள் நண்பன்” வெற்றிக்கு பிறகு கதாநாயகன் சுரேஷ் ரவி பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் உடன் இதனையும் இரண்டாவது திரைப்டம் !!

காவல்துறை உங்கள் நண்பன்” வெற்றிக்கு பிறகு கதாநாயகன் சுரேஷ் ரவி பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் உடன் இதனையும் இரண்டாவது திரைப்டம் !!

சென்னை 04 செப்டம்பர் 2023 பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P இணைந்து தயாரித்து நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் இனிதே துவங்கியது !!

பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது.

கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.

இதற்குமுன்பு பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ் ரவியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இன்னும் தலைப்பிடப்படாத இந்த திரைப்படம் தற்போதைக்கு புரொடக்ஷன். 02 என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.

இந்த திரைப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர் அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

தொழில் நுட்ப குழு விபரம்.

இயக்கம் – K பாலையா

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – N R ரகுநந்தன்

படத்தொகுப்பு – தினேஷ் போனுராஜ்

கலை – C S பாலச்சந்தர்

ஆடை வடிவமைப்பாளர் – N J சத்யா

PRO – சதீஷ் (AIM)