நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படத்தின் தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக இன்று பூஜையுடன் தொடங்கியது.!!

சென்னை 22 ஆகஸ்ட் 2022 நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படத்தின் தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக இன்று பூஜையுடன் தொடங்கியது.!!

புஷ்பா 2′ திரைப்படத்தின் பிரம்மாண்ட தொடக்கவிழா இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

தெலுங்கில் மாஸ் கதாநாயகனாக கலக்கி வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன்.

நடிகர் அல்லு அர்ஜூன். நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’.

செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜூனும், வில்லனாக பகத் பாசிலும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர்.

வசூலை வாரி குவித்த இந்த திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த புஷ்பா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின.

இந்த நிலையில் ‘புஷ்பா 2’ திரைப்படத்திற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியுள்ளது.

இந்த திரைப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் இயக்குனர் சுகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் இந்தியாவில் பல அடர்ந்த காடுகளில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.