அல்டி திரை விமர்சனம் ரேட்டிங் – 2.5 /5
நடிப்பு – அன்பு மயில்சாமி, ராபர்ட், செண்ராயன், மணிஷா ஜித், மாரிமுத்து, பசங்க சிவா குமார், ஏ.வெங்கடேஷ்,
தயாரிப்பு – NSR பிலிம் ஃபேக்டரி
இயக்கம் – எம் ஜே உசேன்
ஒளிப்பதிவு – ஆறுமுகம்
எடிட்டிங் – வில்ஸி
இசை – ஸ்ரீகாந்த் தேவா
மக்கள் தொடர்பு – பிரியா
வெளியான தேதி – 27 நவம்பர் 2020
ரேட்டிங் – 2.5 /5
செல்போன் திருட்டை மையமாக வைத்து அல்டி திரைப்படத்தில் மிக விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏம் ஜெ உசேன்
சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த திரைப்படம்தான் இந்த ‘அல்டி’ அல்டிமேட்டாக திரைப்படமாக உள்ளது.
நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி இந்த அல்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.
கதாநாயகன் அன்பு மயில்சாமியும் கதாநாயகி மணிஷாஜித் ஒரு தலையாக சிறு வயதிலிருந்தே காதலித்து வருகிறார்.
கதாநாயகன் அன்பு மயில்சாமியும் கதாநாயகி மணிஷாஜித்திடம் காதலை சொல்ல வரும் போது செல்போன் பற்றி பேசி காண்பித்து அசிங்க பாடுகின்றார்.
கதாநாயகன் அன்பு மயில்சாமி மற்றும் சென்ராயன் யாசிப் ஆகிய மூன்று நண்பர்களும் சந்தர்ப்ப சூழ்நிலையால் செல்போன் திருடுவதில் ஈடுபடுகிறார்கள்.
அதையே பிறகு தங்களது தொழிலாக செய்து வருகிறார்கள்.
செல்போன் திருட்டில் ஈடுபடும் மூன்று பேர் அவர்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத வேறொரு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர்.
அப்போது கொலை ஒன்று நடந்து விடுகிறது கொலை செய்யப்பட்டது எம் எல் ஏ மகன் எனறு தெரிய வருகிறது.
எம் எல் ஏ மகன் கொலை நடந்த இடத்தில் எம்.எல்.ஏ மகனின் செல்போன் ( ஐபோன் ) இவர்களது நண்பர் ஒருவர் (யாசிப்) கையில் கிடைக்க அந்த ஐபோனில் இருக்கும் வீடியோ ஒன்றுக்காக காவல் துறை அதிகாரி இவர்களை துரத்துகிறது.
மறுபக்கம், எம் எல் ஏ தனது மகனை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கிறார்.
ஒரு பக்கம் எம்.எல்.ஏ-வும் மறுபக்கம் காவல்துறை அதிகாரியும் துரத்த அவர்களிடம் இருந்து மூன்று இளைஞர்களும் எம்.எல்.ஏ-மகனை கொலை செய்தது யார்? என்பதை விறுவிறுப்பாகவும் பல ட்விஸ்ட்டுகளுடனும் சொல்வதுதான் அந்த படம் முவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த அல்டி திரைப்படத்தின் மீதி கதை.
கதாநாயகன் அன்பு மயில்சாமி முதல் திரைப்படம் என்றாலும் பெரும் முயற்சி எடுத்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பெரிதும் மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் தெரிகிறது.
திரைப்படத்தில் சில இடங்களில் அவரது முயற்சி வீண் போனாலும் அனுபவம் மிக்க சென்ராயன் தனது நடிப்பு மூலம் பல காட்சிகள் சரிக்கட்டி இறுக்கிறார்.
நண்பராக வரும் யாசிப்பும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக கையாண்டுள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஜித்தை குறைவான காட்சிகள் இருந்தாலும், பாடல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நின்றுவிடுகிறார்
நடன இயக்குநர் ராபர்ட் காவல்துறை ஆய்வாளர் கதாப்பாத்திரத்தில் வில்லத்தனத்தை காட்டி நடிப்பதில் அடக்கி வாசித்தாலும் ரசிக்க வைத்துள்ளார்.
தனது மகனை பறி கொடுத்த அப்பாவாக எம்.எல்.ஏ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மாரிமுத்து போலிஸ் கான்ஸ்டபிளாக வரும் ‘பசங்க’ சிவகுமாரும் கதாநாயகனின் அம்மாவாக வரும் செந்தி குமாரி அப்பாவாக வரும் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் அவரவர் கதாப்பாத்திரத்திற்கு என்றவாறு பலம் சேர்த்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், மிரட்டலான இரண்டு பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன.
பின்னனி இசை கதையோடு பயணம் செய்கிறது.
ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கும் என்றவாறு பொருத்தமாக உள்ளது.
எடிட்டிர் வில்ஸியின் படத்தொகுப்பும் திரைக்கதையின் திரைப்படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது.
இந்த அல்டி திரைப்படத்தின் முதல் பாதியில் நண்பர்கள் கூத்தடிப்பதோடு கைபேசித் திருட்டுகள் எப்படி நடக்கின்றன?
சென்னை மாநகரத்தில் திருடப்பட்ட கைபேசிகள் எங்கு போய் எப்படி உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளக்கமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஏம் ஜெ உசேன்.
இதுவரை யாரும் அறிந்திராத தெரிந்திராத செல்போன் திருட்டு மற்றும் அதன் பின்னணியை களமாக கொண்டு, இயக்குநர் எம்.ஜே.உசேன் கதையின் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர் எம் ஜெ உசேன்.
திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டு அதிகார வர்க்கங்களுக்குள்ளான மோதலில் சாமானிய முன்று பேரும் சிக்கிச் சின்னாபின்னமாவதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர் எம ஜெ உசேன்.
இயக்குநர் உசேன்க்கு இது முதல்படம் போல் தெரியவில்லை.
முதல் திரைப்படத்திலேயே கவனம் ஈர்த்திருகிறார் இயக்குநர் எம ஜெ உசேன்.
இந்த ‘அல்டி’ திரைப்படம் அல்டிமேட்டனா திரைப்படம்தான்.