அரியவன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.
நடிகர் நடிகைகள் :- இஷான், பிரணாலி, டேனியல் பாலாஜி, சூப்பர்குட் சுப்ரமணி, ராமா, ரவி வெங்கட்ராமன், கல்கி ராஜா, நிஷ்மா செங்கப்பா, ரமேஷ் சக்ரவர்த்தி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மித்ரன் ஆர் ஜவஹர்.
ஒளிப்பதிவு :- கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ.
படத்தொகுப்பு :- எம்.தியாகராஜன்.
இசை :- ஜேம்ஸ் வசந்தன் / வேத்சங்கர் / கிரி நந்த்.
தயாரிப்பு நிறுவனம் :- MGP மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்:- MGP மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்.
ரேட்டிங் :- 3.25 / 5.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திருச்சிற்றம்பலம்’ எனும் வெற்றித் திரைப்படத்தை இயக்கிய மித்ரன் R. ஜவஹரின் அடுத்த படைப்பு அரியவன்.
பெண் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவிகள் குடும்ப பெண்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பாலியல் வன்கொடுமைகளை சிக்கல்களையும் அதன் விளைவுகள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தி பெண்களுக்கு விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு திரைப்படம் அரியவன்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான் இந்த ஆரியவன் திரைப்படம்.
கதாநாயகன் இஷான் கபடி வீரர் இருந்து வருகிறார்
கதாநாயகி பிரணாலி ஒரு ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த இவர் கதாநாயகன் இஷானுடன் காதல் மலர்கிறது.
வில்லன் டேனியல் பாலாஜி தனது தம்பி தாசரதி நரசிம்மன் மற்றும் அவர் நண்பர்கள் மூலம் இளம் பெண்களை காதல் வலையில் விழ வைத்து காதல் என்ற போர்வையில் அவர்களை ஏமாற்றி படுக்கையில் நாசம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டுகிறார்.
கதாநாயகி பிரணாலியின் தோழி ஜெஸ்ஸி எனும் இளம்பெண் அந்த கும்பலிடம் சிக்கி படுக்கையில் நாசமான விடியோவை கற்பித்து அடிக்கடி மிரட்டி கதாநாயகியின் தோழி தற்கொலைக்கு முயல்கிறார்.
இதிலிருந்து தோழி ஜெஸ்ஸியை காப்பாற்றும் கதாநாயகி பிரணாலி, வில்லன் டேனியல் பாலாஜி கும்பலிடம் இருந்து ஆபாச வீடியோக்களை மீட்க கதாநாயகி பிரணாலி கதாநாயகன் இஷானை நாடுகிறார்.
இறுதியில் வில்லன் டேனியல் பாலாஜியிடம் இருந்து பல இளம் பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றினார்? கைப்பற்றவில்லையா?
கதாநாயகன் இஷான் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இநத ஆரியவன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஆரியவன் திரைப்படத்தில் கதாநாயகனாக இஷான் அறிமுகமாகி இருக்கிறார்.
அறிமுக கதாநாயகன் இஷான் ஆர்ப்பாட்டம் இல்லாத யதார்த்த நடிப்பை அருமையாக கொடுத்துள்ளார்.
அறிமுக கதாநாயகன் இஷான் சண்டை காட்சிகளில் கேப்டன் விஜயகாந்தின் லெக் பைட்டை ஞாபகப்படுத்துகிறார்.
கபடி, காதல ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் தன்னால் முடிந்த அளவு நடிப்பை மிக அருமையாக கொடுத்துள்ளார்.
அறிமுக கதாநாயகன் இஷான் இநத திரைப்படத்திற்க்கு கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார்.
இந்த ஆரியவன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிராணலி அறிமுகமாகி இருக்கிறார்.
கதாபாத்திரத்தை உணர்ந்து அதை நன்றாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை அருமையாக கொடுத்து இருக்கிறார்.
அறிமுக கதாநாயகி பிரணாலி காதல் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தன்னுடைய வழக்கமான ஸ்டைலிஷ் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி மிரட்டி இருக்கிறார்.
வில்லன் டேனியல் பாலாஜி தம்பியாக வரும் தாசரதி நரசிம்மன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் தாசரதி நரசிம்மன் நல்ல ஒரு எதிர்காலம் உள்ளது.
ரமா, சூப்பர் குட் சுப்ரமணி, சத்யன் ஆகியோர் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை மற்றும் பாடல்கள் வேத்சங்கர் கிரி நந்த் பிண்ணனி இசை திரைப்படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் பெரிதும் உதவி இருக்கிறது.
பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் திரைப்படம் இருப்பது மிகவும் சிறப்பு.
மொத்தத்தில் அரியவன் திரைப்படம் பெண்களுக்கு பாதுகாப்பானவன்.