எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் பணி புரிந்த பிரபல கலை இயக்குனர் R.ராதா காலமானார்

சென்னை 14 பிப்ரவரி 2023 எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் பணி புரிந்த பிரபல கலை இயக்குனர் R.ராதா காலமானார்.!

எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெயலலிதா ஜெய்சங்கர் முத்துராமன், சிவக்குமார்,  கமலஹாசன்/ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர் நடிகையர் திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் R.ராதா.

அவர் இன்று 14.பிப்ரவரி.2023 விடியற்காலை 3.30 மணி அளவில் காலமானார்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு தற்போது வயது 88.

அவருடைய மனைவி லீலாவதி (74 )  மூன்று மகள்களும் உள்ளனர்.

இவர் முக்தா சீனிவாசன், SP முத்துராமன் போன்ற பல இயக்குனர்களின்   படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இவர் பணியாற்றிய படங்கள் எம்.ஜி.ஆர். நடித்த ஆனந்த ஜோதி, தெய்வத்தாய் , அடிமைப்பெண் படங்களிலும் சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு, ஜெயலலிதா முத்துராமன் நடித்த சூர்யகாந்தி, கமலஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிங்காரவேலன், ரஜினிகாந்த் நடித்த பில்லா, சிவப்புச்சூரியன், நான் சிவப்பு மனிதன், பொல்லாதவன், போன்ற |75 க்கு மேற்பட்ட படங்கள் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

இவர் கலை இயக்குனர் அங்கு முத்துவிடம் உதவியாளராக பணியாற்றியவர்

இவருக்கான ஈமச்சடங்குகள் இன்று மாலை 4.30 மணியளவில் நூங்கம்பாக்கம் சுடுகாட்டில் நடைபெறவிருக்கிறது விட்டு முகவரி: Doorno – 3, பிளாட்No 48, திருமுருகன் பிளாட் / 5வது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம் (கவிஞர் வைரமுத்து வீடு பின்பக்கத்தெரு) கோடம்பாக்கம் சென்னை – 24.

தொடர்புக்கு : தினேஷ் 9884467576