Sunday, February 16
Shadow

Author: MOVIEWINGZ COM

வைரலாகும் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் காணொளி

வைரலாகும் ‘தர்பார்’ ஷூட்டிங் ஸ்பாட் காணொளி

சினிமா - செய்திகள்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடித்து ரஜினிகாந்த் திரும்பும் காணொளி ஒன்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
சந்தானத்தின் நடிப்பில்  ‘ஏ1’; படத்திற்கு எத்தனை கோடி தெரியுமா..??

சந்தானத்தின் நடிப்பில் ‘ஏ1’; படத்திற்கு எத்தனை கோடி தெரியுமா..??

சினிமா - செய்திகள்
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் பத்து நாட்களுக்கு முன் வெளியான படம் தான் ‘ஏ1’. சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ராஜ் நாராயணன் இப்படத்தை தயாரித்திருந்தார். காமெடி சரவெடியில் உருவான இப்படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது. வழக்கமான சந்தானத்தின் டைமிங் காமெடி இப்படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. இதுவரை, தமிழகத்தில் மட்டும் ரூ.12 கோடி வரை வசூலாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’ படமும் சந்தானத்திற்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது. 2019ல் வெளிவந்த இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறாராம் சந்தானம்..
தொரட்டி – திரை விமர்சனம்

தொரட்டி – திரை விமர்சனம்

திரை விமர்சனம்
நடிப்பு - ஷமன் மித்ரு, சத்யகலா அழகு மற்றும் பலர் தயாரிப்பு - ஷமன் பிக்சர் இயக்கம் - மாரிமுத்து இசை - வேத்சங்கர் சுகவனம், ஜித்தின் ரோஷன் மக்கள் தொடர்பு - சி.என்.குமார் வெளியான தேதி - 2 ஆகஸ்ட் 2019 ரேட்டிங் - 3/5 புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்திற்கு எதிராக எவ்வளவோ பேர் எவ்வளவோ பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். குடிப்பழக்கத்தால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் எழை இளைஞன் ஒருவனும், அவனுடைய வாழ்க்கையும் எப்படி எல்லாம் சீரழிந்து போனது என்பதை இந்தப் படம் ஆழமாகவும், அழுத்தமாகவும் புரிய வைத்திருக்கிறார் நமது இயக்குனர். மாரிமுத்து தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு பல படங்கள் வெளி வந்தாலும் நான்கைந்து படங்கள்தான் நாமும் தரமான படங்களைத் தந்து கொண்டிருக்கிறோம் என்ற பெருமையை சற்றே தமிழ் சினிமாவை காப்பாற்றிக் கொண்டு வருகிறோம். இயக்குனர் மாரிமுத்து, இராமநாதபுரம் மாவட்டத்
கோமாளி படத்தின் டிரெய்லரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்து மாற்றிக் கொண்ட –  ஜெயம் ரவி

கோமாளி படத்தின் டிரெய்லரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்து மாற்றிக் கொண்ட – ஜெயம் ரவி

சினிமா - செய்திகள்
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. சம்யுக்தா, யோகிபாபு, சாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற 23வயது வாலியர் இயக்க ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படம் இம்மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியானது. இந்த கோமாளித்தனமாக டிரைலருக்கு ரசிகர்களிடம் மிக நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த டிரைலரில் கடைசி நொடியில் கோமாவில் இருந்து மீண்ட ஜெயம் ரவி, யோகிபாபுவிடம் இது எந்த வருடம்- என கேட்கிறார். அதற்கு 2016 என்று சொல்கிறார் யோகிபாபு. ஜெயம் ரவி அவரின் பதிலை மறுக்கவே, யோகிபாபு அதை பதிவு செய்ய ரஜினிகாந்த் அரசியல் வருகை பற்றிய பேசிய அறிவிப்பு வீடியோவை காட்டுகிறார். அதில் கடந்த 2017ஆம் ஆண்டில்
தமிழக பாஜக தலைமை மாறினால் நல்லது நடக்கும்…ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு!

தமிழக பாஜக தலைமை மாறினால் நல்லது நடக்கும்…ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு!

அரசியல் - செய்திகள்
கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இணையத்தில் வைரலாகி வருபவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இவர் அடுத்தடுத்து தமிழகத்தில் நிகழவிருக்கும் பல்வேறு நிகழ்வுகளை கணித்து வருபவர். இதுவரை கணித்த பல்வேறு விஷயங்கள் உண்மையாகி வருகிறது. அதனை தொடர்ந்து சிறு வயதிலயே கவனிக்கபடக்கூடிய ஜோதிடர்களில் ஒருவராக மாறி வருகிறார் பாலாஜி ஹாசன். தமிழகத்தின் அரசியல் நிலவரம் மற்றும் திரை உலகம் குறித்த கணிப்புகளும் தற்போதைய தமிழக சூழலில் நிஜத்தில் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் குறித்து பாலாஜி ஹாசன் வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துக்கள் தற்போதைய அரசியல் களத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் அ.ம.மு.க எழுந்து வரும் நேரமிருக்கிறது என்றும் கணித்திருந்தார். அதே பேட்டியில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் பத்து ஆண்டுகளில் நல்ல எண்ணிக்கையிலான இடங்களை பிடிக்கும் என்ற
103 ஏக்கர் ஏரியை தூர்வாரும் நடிகர் கார்த்தியின் ‘உழவன்’ அமைப்பு; மகிழ்ச்சியில் மக்கள்!

103 ஏக்கர் ஏரியை தூர்வாரும் நடிகர் கார்த்தியின் ‘உழவன்’ அமைப்பு; மகிழ்ச்சியில் மக்கள்!

அரசியல் - செய்திகள்
திருவண்ணாமலையின் முக்கிய நீர் ஆதாரம், 103 ஏக்கர் பரப்பளவு கொண்ட எடப்பாளையம் விண்ணமலை ஏரி. இந்த ஏரியின் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலமும் பயனடைகிறது. அது மட்டுமல்லாமல் ஆறு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் பல வருடங்களாக தூர்வாராமலும் சாக்கடை நீர் கலந்தும், குப்பைகளை ஏரியில் கொட்டியும் அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது. ஆதலால் இதை சீரமைக்கும் பணியை நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன், எழுத்தாளர் பவா செல்லத்துரையின் வம்சி புக்ஸ் மற்றும் நீர்துளிகள் இயக்கம் ஆகிய மூன்று அமைப்புகளும் முன்னெடுக்கிறது. சீரமைத்து தூர்வாரும் பணி (02.08.2019) காலை 7 மணிக்கு துவங்கியது. சீரமைக்கும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
திருமணமான 20 நாட்களில் கணவனை எரித்துக் கொன்ற

திருமணமான 20 நாட்களில் கணவனை எரித்துக் கொன்ற

அரசியல் - செய்திகள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி. நகரை சேர்ந்தவர் சேதுபதி (வயது 24). இவர் புதுவையில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார். இவர் டி.வி. நகரை சேர்ந்த முருகவேணி (வயது 19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் அங்குள்ள கூரை வீட்டில் வசித்து வந்தனர். சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று மாலை சேதுபதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. சிறிது நேரத்தில் அந்த வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உள்ளே தூங்கி கொண்டிருந்த சேதுபதி திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று பரவியது. உடனடியாக திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் துக்ளக் தர்பார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் துக்ளக் தர்பார்.

சினிமா - செய்திகள்
தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதிதிராவ் ஹெய்தாரி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும் கவர்ந்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு மாஸான கூட்டணியை இணைத்து கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ஒருவர், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர் 96 படம் மூலமாக இயக