பாரதி கண்ணம்மா’ நடித்த சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் காலமானார்.

சென்னை 22 மார்ச் 2021

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானவர் வெங்கடேஷ்.

மேலும் பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்துள்ளார்.

அதில் தொடரில் கதாநாயகிக்கு தந்தையாக நடித்திருந்தார்.

பெரும்பாலான டிவி தொடர்களில் இவர் கிராமத்து தந்தையாக நடித்திருக்கிறார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஈரமான ரோஜாவே தொடரிலும் நடித்து வந்தார்.

மேலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

‘மாயநதி’ என்ற திரைப்படத்தில் வெண்பாவின் சித்தப்பாவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்தார்.

இதனையறிந்த நடிகை வெண்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் சின்னத்திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.