தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோவை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரத்ததானம் !

சென்னை 02 மே 2021

தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோவை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரத்ததானம் !

தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட மாணவரணி தலைவர் S.பாபு அவர்களின் தலைமையில், சிங்கை நகர மாணவரணி தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இரத்ததானம் முகாம் நடைபெற்றது .

மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இருக்கிறார்கள்.

தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு 70 நாட்களுக்கு ரத்ததானம் செய்ய முடியாது .

அதனை கருத்தில் கொண்டு தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் ஜுன் 22 ஆம் தேதி வருவதையொட்டி முன்கூட்டியே இன்று கோவை சாந்தி சோஷியல் சர்விஸ் மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் நடைப்பெற்றது.