ப்ளூ ஸ்டார் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 4/5.

நடிகர் & நடிகைகள் :- அசோக் செல்வன், ஷாந்தனு, பிரித்வி, கீர்த்தி பாண்டியன், பக்ஸ், குமரவேல், லிஸ்ஸி ஆண்டனி, T.N அருண்பாலாஜி, திவ்யா துரைசாமி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- S.ஜெயக்குமார்.

ஒளிப்பதிவாளர் :- தமிழ் அ அழகன்.

படத்தொகுப்பாளர் :- செல்வா RK.

இசையமைப்பாளர் :- கோவிந்த் வசந்தா.

தயாரிப்பு நிறுவனம் :- நீலம் புரொடக்ஷன்ஸ்-லெமன் லீப் கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :-  பா.ரஞ்சித், R. கணேஷ் மூர்த்தி, G.சௌந்தர்யா.

ரேட்டிங் :- 4. / 5.

அரக்கோணம் அருகிலுள்ள கிராமத்தில் 90 கால கட்டங்களில் கிரிக்கெட் விளையாட்டில் மோதும் கிராம இளைஞர்களை பற்றிய கதை நடக்கிறது.

அரக்கோணம் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்த ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணியில் கதாநாயகன் அசோக் செல்வன் தலைமையில் இயங்குகிறது.

அதே கிராமத்தில் சேர்ந்த ஆல்பா பாய்ஸ் சாந்தனு தலைமையில் இயங்குகிறது.

இந்த இரண்டு அணியைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் மட்டும் இன்றி, மற்ற விசயங்களில் அடிக்கடி மோதிக் கொண்டாலும் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே தங்களது வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கிரிக்கெட் விளையாட்டின் மூலமாகவே இந்த இந்த இரண்டு அணியை சேர்ந்தவர்கள் பொதுவான பிரச்சனை ஒன்றை சந்திக்க, அது இவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் இன்றி, சமூக வாழ்க்கையையும் எப்படி எல்லாம் மாற்றுகிறது,

கதாநாயகன் அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணியை அணியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஆல்பா பாய்ஸ் சாந்தனு அணியை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் உச்சம் தொட்டார்களா? தொடவில்லையா? என்பதுதான் இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் மீதிக்கதை.

இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

கதையின் நாயகனாக ரஞ்சித் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் அசோக் செல்வன், கல்லூரி மாணவராக, அனல் தெறிக்கும் முகத்தோடு, கிரிக்கெட் விளையாட்டில் ஆக்ரோஷமாகவும், தன் காதலில் உருகும் ஐஸ் கட்டியாகவும் நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை உருக வைத்து விட்டார்.

மற்றொரு கதையின் எதிர் நாயகனாக ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாந்தனு, கதாநாயகன் அசோக் செல்வனுக்கு இணையான நடிப்பில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் எதிர் நாயகனாக சாந்தனு பல இடங்களில் எந்தவித ஆர்பாட்டமும் இன்றி தனது மனமாற்றத்தை கண்கள் மூலமாகவே நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதையின் நாயகன் அசோக் செல்வனின் தம்பியாக ஷாம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ், துடுக்கான இளைஞராக காமெடியும், காதலும் கலந்த நடிப்பில் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து ரசிகர்களிடம் கைதட்டல் வாங்குகிறார்.

இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார்.

ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி கீர்த்தி பாண்டியன், தைரியமான  பெண்ணாக தெள்ளத் தெளிவாக கதாபாத்திரத்தை உணர்ந்து அப்படியே நடித்திருக்கிறார்.

தனது காதலன் கதாநாயகன் அசோக் செல்வனிடம் கிரிக்கெட் பற்றி பேசிக் கொண்டே கிரிக்கெட் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தும் விதம் மிக மிக அருமையாக இருக்கிறது.

கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள
இளைஞர்களை உற்சாகப்படுத்தி ஊக்கமளிக்கும் வழக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பக்ஸின் கதாபாத்திரமும், நடிப்பும் திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.

கதாநாயகன் அசோக் செல்வனின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிஸ்ஸி மற்றும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குமரவேல் ஆகியோரது கதாபாத்திரமும், நடிப்பும் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல உதவி உள்ளது.

ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ.அழகன், புழுதி நிறைந்த கிராமத்து விளையாட்டு மைதானத்தையும், புல்வெளி கொண்ட கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி பள்ளி மைதானத்தையும் தனது ஒளிப்பதிவின் மூலம் வித்தியாசத்தை காண்பித்து மிகவும் நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்.

அரக்கோணம் பகுதியின் வெயில் மற்றும் அப்பகுதி மக்களின் வண்ணங்களை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அந்தப் பகுதிக்குச் செல்லும் அளவிற்கு பயணிக்க வைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே, படத்தொகுப்பு மூலம் முதல் பாதியில் வரும் கிரிக்கெட் போட்டிகளை வேகமாக நகரும்படி காட்சிகளை அமைந்தாலும்
இரண்டாம் பாதியில் வரும் கிரிக்கெட் போட்டிகள் மீது அதிக நேரம் எடுத்துக் கொண்டதை தவிர்த்திருக்கலாம்.

1990-களில் நடக்கும் கதை நடக்கும் கதை என்பதால் மிகவும் கவனமாக கலை இயக்கத்தை கவனித்திருக்கும் கலை இயக்குநர் ஜெயரகு.எல், அக்காலக் கட்டத்தில் இருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், வாகனங்கள், மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பல விசயங்களை மிக நுணுக்கமான முறையில் கையாண்டு பட குழுவினர் மற்றும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் பாராட்டையும் பெறுகிறார்.

இசையமைப்பாளர்
கோவிந்த் வசந்தாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒரு படி மேல் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக பின்னணி இசை அமைந்திருக்கிறது.

பாடலாசிரியர்கள் உமாதேவி மற்றும் அறிவு ஆகியோரின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்.

அதிலும் அந்த காதல் மெலோடி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மெலோடியாக அமைந்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்துக்கொண்டு கிராமப் பகுதிகளில் நடக்கும் சாதி அரசியலை பேசியிருக்கும் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்,

கிராமங்களில் நடக்கும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள பிரிந்திருக்கும் இளைஞர்களை ஒன்று சேர வேண்டும் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை வலியுறுத்திய விதம் மிகவும் அருமை இயக்குநர் எஸ்.ஜெயக்குமாரை பாராட்டியாக வேண்டும்.

இரு தரப்பினருக்குமான பொது பிரச்சனை நடக்கும் போது இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அந்த பிரச்சனையை எதிர்த்து வெற்றி பெற முடியும், என்ற சமூக அரசியல் பேசியிருக்கும் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்.

மொத்தத்தில் – ப்ளூ ஸ்டார் திரைப்படம் வானத்தில் உள்ள அத்தனை நட்சத்திரங்களும் மின்னினால் எந்த அளவிற்கு பவர் இருக்குமோ அந்த அளவுக்கு மின்னும் இந்த ப்ளூ ஸ்டார்.