பொம்மை நாயகி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3./5

நடிகர் நடிகைகள் :- யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, கேலப், ஸ்ரீமதி
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷான்.

ஒளிப்பதிவு :- அதிசயராஜ்.

படத்தொகுப்பு :- செல்வா RK.

இசை :- சுந்தரமூர்த்தி.

தயாரிப்பு நிறுவனம் :- நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- பா.ரஞசித், மனோஜ் லியோனல் ஜேசன்.
வேலன், லெமுவேல்.

ரேட்டிங் :- 2.75 / 5.

வசதி இல்லாதவனே வசதி இருக்கப்பட்டவன் ஆட்டிப் படைக்கும் மற்றுமொரு கதைதான் இநத பொம்மை நாயகி.

ஒரு பெண் குழந்தையின் மீதான பாலியல் வன்கொடுமை, மற்றும் ஜாதி பிரச்சினை என இரண்டையும் கலந்து இயக்குனர் ஷான் கொடுத்திருக்கிறார்

எதை மையக் கருத்தாக வைத்து திரைப்படத்தைக் கொடுப்பது என கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் ஷான்.

தமிழ் திரைப்பட உலகில் காமெடி நடிகராக மட்டுமே வலம் வந்த நடிகர் யோகிபாபு, முதல் முறையாக பாசமான தந்தையாக கதையின் நாயகனாகவும் குணச்சித்திர கதாபாத்திரமாகவும் இந்த பொம்மை நாயகி திரைப்படத்தில் அசத்தியிருக்கிறார்.

கடலூர் அருகேயுள்ள கிராமத்தில் மனைவி, தன் செல்ல மகள் பொம்மை நாயகியுடன் வாழ்ந்து கொண்டு
டீக்கடையில் வேலை பார்த்து
வருகிறார் கதையின் நாயகன் யோகி பாபு.

கதையின் நாயகன் யோகி பாபுவின் தாய் இரண்டாம் தாரம் என்பதாலும், அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சொந்த அண்ணனாலும், சொந்த ஊரிலும் கதையின் நாயகன் யோகிபாபு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்.

இந்நிலையில்ஒன்பது வயது கதையின் நாயகன் மகள் பொம்மை நாயகியை ஊர் திருவிழாவின்போது தனது அண்ணனின் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கதையின் நாயகன் யோகி பாபுவின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.

ஊர்க்காரர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் சிலரால் நீதிமன்றத்தை நாடுகிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கிறது .

ஆனால் அதையும் மீறி கதையின் நாயகன் யோகிபாவுக்கு பிரச்சினை வருகிறது.

இதை ஊரில் யாரும் தட்டிக் கேட்காத நிலையில், காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவிக்காக கதையின் நாயகன் யோகி பாபு நாடிச் செல்கிறார்.

இறுதியில் அவருக்கு நீதி கிடைத்ததா கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த பொம்மை நாயகி திரைப்படத்தின் மீதிக் கதை.

இநத பொம்மை நாயகி திரைப்படத்தில் கதை நாயகனாக யோகி பாபு நடித்திருக்கிறார்.

வேலு கதாபாத்திரத்தில் யோகி பாபு மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார்

தன்னால் கனமான பாத்திரங்களை தாங்க முடியும் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார் யோகி பாபு.

ஒரு பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார்.

கதையின் நாயகன் யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார்.

மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

யோகிபாபுவுக்கும் இவருக்குமான பிணைப்பு திரையில் ரசிக்க வைக்கிறது.

கதையின் நாயகன் யோகி பாபுவின் தந்தையாக ஜிஎம்.குமார் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.

யோகி பாபுவின்அண்ணனாக அருள்தாஸ் மிரட்டல் ஆன நடிப்பை கொடுத்துள்ளார்.

நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அதிசயராஜ் ஒளிப்பதிவு மிக அருமையாக உள்ளது.

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி பிண்ணனி இசை மற்றும் பாடல் அருமையான அமைந்துள்ளது

நீதிமன்ற காட்சிகள் பல திரைப்படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன.

நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முடியுமே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை உணர வைத்துள்ளார் இயக்குனர்.

சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் சாதகமான இருக்கிறது என்பதையும் சொல்லியுள்ளார்.

படத்தில் வரும் வசனங்கள் கள யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகின்றன.

பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற என கூறும் வசனம் சூப்பர்.

தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன், போற உயிரு போராடியே போகட்டும் சார் போன்ற வசனங்கள் அருமை.

உயர் சாதியினர் தப்பு செய்தால் சொந்தமும் சட்டமும் அவர்கள் பக்கமே இருக்கும் என்பதையும் இயக்குனர் ஷான் பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் பொம்மநாயகி திரைப்படம் அருமை.