புஜ்ஜி at அனுப்பட்டி திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- கமல்குமார், “நக்கலைட்ஸ்” வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், பிரணிதி சிவசங்கரன், நக்கலைட்டுகள் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன், லாவண்யா, கண்மணி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராம் கந்தசாமி.

ஒளிப்பதிவாளர் :- அருள்மொழி சோழன்.

படத்தொகுப்பாளர் :- சரவணன் மாதேஸ்வரன்.

இசையமைப்பாளர் :- கார்த்திக் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- கவிலாயா கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- ராம் கந்தசாமி.

ரேட்டிங் :- 3.5/5.

ஊத்துக்குளி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் குடிகார தந்தை முருகேசன் மற்றும் தாய் சித்ரா ஆகியோருக்கு இரண்டு குழந்தைகள் சிறுவன் கார்த்திக் விஜய், சிறுமி பிரணிதி சிவசங்கரன், அண்ணன் தங்கை இருவரும் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்கள்.

பண்ணை வீட்டின் உரிமையாளர் கமல் குமாருக்கு சிறுவன் கார்த்திக் விஜய், மற்றும் சிறுமி பிரணிதி சிவசங்கரன், இருவர் மீது அதிகளவில் பிரியமாக இருக்கிறார்.

ஒரு நாள் சிறுவன் கார்த்திக் விஜய், தங்கை பிரணிதி சிவசங்கரன், இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் அழகான ஒர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது.

அந்த ஆட்டுக்குட்டியை தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து, அண்ணன் கார்த்திக் விஜய், தங்கை பிரணிதி சிவசங்கரன், அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்த்து வருகிறார்கள்.

ஓர் அசைவப் பிரியரான அண்ணன் கார்த்திக் விஜய், ஆனால் அந்த ஆட்டுக்குட்டியை உணவாகப் பார்க்கிறான்.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து ஆட்டின் உரிமையாளர் ஆட்டை தேடி வந்து ஆட்டை எடுத்து செல்கிறார்.

எனது செல்ல புஜ்ஜியை எடுத்து சென்று விட்டார்கள் என பிரணதி சிவசங்கரன் மனமுடைந்து போகிறாள்.

ஆட்டுக்குட்டியைப் பிரிந்து பிரணதி சிவசங்கரன் மனம் வருந்துவதைப் பார்த்து அந்தப் பண்ணையின் உரிமையாளர் கமல் குமார் புஜ்ஜியைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தை கொடுத்து ஆட்டை மீட்டுக் கொண்டு வந்து பிரணதி சிவசங்கரனிடம் ஒப்படைக்கிறார்.

சில மாதங்களில் புஜ்ஜி வளர்ந்து பெரிய கிடா வளர்ந்து விடுகிறது.

இந்த நிலையில் அண்ணன் கார்த்திக் விஜய், தங்கை ப்ரணிதி சிவசங்கரனின் குடிகார தந்தை முருகேசன் குடிப்பதற்குப் பணம் இல்லாமல் தவிக்கும் பொழுது புஜ்ஜி ஆட்டுக்குட்டி கண்ணில் பட அதை விற்றுக் குடித்து விடுகிறார்.

ஆட்டுக்குட்டியைக் காணாமல் தவிக்கும் பிற நதி சிவசங்கரனை சமாதானம் செய்து ஆட்டுக்குட்டியைத் தேடிப் புறப்படுகிறார்கள் சிறுவன் கார்த்திக் விஜய், சிறுமி பிரணிதி சிவசங்கரன், இருவரும் தனது செல்ல புஜ்ஜி ஆட்டுக்குட்டியை தேடி கிளம்புகிறார்கள்.

புஜ்ஜி ஆட்டுக் குட்டியைத் தேடிப் புறப்படும் அண்ணன் கார்த்திக் விஜய், தங்கை ப்ரணிதி சிவசங்கரன், அவர்கள் இருவரும் சந்திக்கும் சம்பவங்களும் இன்னல்களும், தேடி சென்ற இருவருக்கும் புஜ்ஜி ஆட்டுக்குட்டி கிடைத்ததா? கிடைக்கவில்லையா? என்பதுதான் இந்த “புஜ்ஜி அட் அனுப்பட்டி” மீதிக்கதை.

இந்த புஜ்ஜி அட் அணுப்பட்டி திரைப்படத்தில் கதையின் நாயகியாக சிறுமி பிரிணதி சிவசங்கரன் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் சிறுமி பிரிணதி சிவசங்கரன் நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாக நடித்துள்ளார்.

ஆட்டுக்குட்டி புஜ்ஜியை பாசமாக வளர்ப்பது, காணவில்லை என்றதும் கதறுவது, அதைத் தேடி கிடைத்துவிட வேண்டும் என்று ஆர்வத்துடன் சுற்றித் திரிவது என அற்புதமாக நடித்து உள்ளார்.

கதையின் நாயகி சிறுமி பிரணதி சிவசங்கரனின் அண்ணனாக நடித்திருக்கும் சிறுவன் கார்த்திக் விஜயும் உண்மையான அண்ணனகவே திரையில் தோன்றியிருக்கிறார்.

ஆடு காணவில்லை என்றதும் தங்கை சிறுமி பிரணதி சிவசங்கரனை தேற்றுவது, தங்கையின் பிடிவாதத்தால் ஆட்டைத் தேடி புறப்படுவதும் என்று பொறுப்பான அண்ணன், அதுவும், ஆரம்ப காட்சியில், ஆட்டுக்கறி வாங்கும்போது முகத்தில் வெளிப்படுத்தும் குதூகலம், ஆட்டுக்காக தங்கை அழுததால், “ஆட்டுக்கறி சாப்பிடுவதையே விட்டுட்டேன்” என்று சொல்வது என மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஆட்டுக்குட்டியை தொலைத்து விட்டு தேடிவரும் கார்த்திக் விஜய், மற்றும் ப்ரணிதி சிவசங்கரன், இவர்களுக்கு துணையாக வரும் தர்ஷினி கதாபாத்திரத்தில் நக்கலைட்ஸ் மீனா சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பெற்றோரை இழந்த நிலையில், எப்போதும் முகத்தில் சோகத்தை நிரப்பி… அதே நேரம் உயிர்களிடம் அன்பு காட்டுவதும் என அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார்.

பண்ணையார் கதாபாத்திரத்தில் நடந்திருக்கும் கமல் குமார் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்கிறார்.

குழந்தைகளிடம் பாசம் காட்டுவது, அவர்கள் காணவில்லை என்றதும் துடிதுடித்து தேடுவதும் என மனித நேயமிக்க கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

நேர்மையான காவல்துறை காவலராக வரும் லாவண்யா கண்மணி, கறிக்கடை நடத்தும் இஸ்லாமியராக வரும் நபர் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு மூலம் அந்த கிராமத்தையும் இரவு நேர காட்சிகளையும் மிக தெளிவாக படம் பிடித்து காண்பித்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு கதைக்கேற்றவாறு பயணித்திருக்கிறார்.

இளைய இசைஞானி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஓர் உயிரைத் தேடி இரு உயிர்களின் பயணம் செய்யும் கதையை மிக மிக அருமையான திரை கதையை அமைத்து புதுமையான காட்சிகளை வடிவமைத்து மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராம் கந்தசாமி.

மொத்தத்தில் – இந்த புஜ்ஜி அட் அனுப்பட்டி படம் ஐந்தறிவு ஜீவனை இரண்டு ஆறறிவு ஜீவன்கள் தேடும் கதை குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான திரைப்படம்.