Friday, August 7
Shadow

சினிமா – செய்திகள்

வெளிநாட்டில் சிக்கித் தவித்த மருத்துவ கல்லூரி மாணவர்களை சென்னைக்கு வர உதவி செய்து அனுப்பி வைத்த  நடிகர் சோனு சூட்.

வெளிநாட்டில் சிக்கித் தவித்த மருத்துவ கல்லூரி மாணவர்களை சென்னைக்கு வர உதவி செய்து அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்.

சினிமா - செய்திகள்
வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்களை தனி விமானம் மூலம் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார். தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சோனு சூட். திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் கதாநாயகன் என்று ஊரடங்கு நேரத்தில் நிரூபித்திருக்கிறார் நடிகர் சோனு சூட். இவர் முதலில் கொரோனா வைரஸ் நோய் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார். பின்னர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து உதவினார். சமீபத்தில் குழந்தைகளின் படிப்புக்கு பசுமாட்டை விற்று செல்போன் வாங்கிய விவசாயிக்கு நடிகர் சோன...
எத்தனை காலம்தான் கொரோனா பயத்துடன் வாழ முடியும் சினிமா பணிகளை தொடங்கினார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்.

எத்தனை காலம்தான் கொரோனா பயத்துடன் வாழ முடியும் சினிமா பணிகளை தொடங்கினார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார்.

சினிமா - செய்திகள்
கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பரவலை தடுக்க நாடெங்கிலும் பொதுமுடக்கம் விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக திரைப்பட படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தன் திரைப்பட பணிகளை தொடங்குகிறார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார். அட்ரங்கி ரே, பெல்பாட்டம், ரக்‌ஷா பந்தன் போன்ற திரைப்படங்களை பணிகளை தொடங்கி உள்ளார். இது குறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் கூறியதாவது… கொரோனா வைரஸ் நோய் தொற்று பயத்துடன் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தேன். ஆனால் எத்தனை காலம்தான் பயத்துடன் வாழ முடியும். ஆரம்பத்தில் கொரோனா வைரஸை பற்றி அதிகம் அறியப்படவில்லை. இதனால் நிறைய பயம் இருந்தது. அது ஒரு நபரைப் பாதிக்கும் விதம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது உடலில் நோய் எதிர்ப்பு திறன் இருந்தால், கொரோனாவை வெல்ல முடியும் என்பதை அறிந்துள்ளோம். எனவே எங்கள் குழு முழுமைக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான்.

2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான்.

சினிமா - செய்திகள்
திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சுதந்திர இசை ஆல்பமான ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹாப்’ எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே மாறிவிட்டது. சமகாலத்தில் உலகின் மிகப்பெரும் தமிழ் ராப்பிசைக் கலைஞராக திகழ்வதற்கு மேலாக, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் ‘ஹிப்ஹாப் தமிழா’ புகழ்பெற்றுள்ளார். வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார். ...
அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படமாக ‘தளபதி ஸ்டாலின் 2021’ உருவாகியுள்ளது.

அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படமாக ‘தளபதி ஸ்டாலின் 2021’ உருவாகியுள்ளது.

சினிமா - செய்திகள்
இப்போதுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் வீழ்ச்சியையும் அரசாங்கத்தின் செயல்படாத தன்மையையும் மக்கள் பார்த்துக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள். செயல்படாத தலைமையைக் கொண்ட இந்த ஆட்சியை எண்ணி வேதனைப்படும் ஒரு தி.மு.க  தொண்டனின் கோபமும் குமுறலும் கொண்ட குரலாக இந்தக் குறும்படம் 'தளபதி ஸ்டாலின் 2021'உருவாகியிருக்கிறது. இது மக்களின் குரலை எதிரொலிக்கிறது. "ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல. காவியம்" என்று ஒரு தொண்டனின் குரலோடு தொடங்குகிறது குறும்படம். இப்போதைய ஆட்சியின் அவலங்களை வரிசையாக பட்டியலிடுவதுடன் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு பரப்பி வருபவர்களுக்கும் சாட்டையடியாக அந்தக் கதாபாத்திரத்தின் குரல் ஒலிக்கிறது. ஸ்டாலினை ஆதரிக்க வேண்டியது தமிழக எதிர் காலத்தின் கட்டாயம் என்பதை எடுத்துச் சொல்கிறது இப்படம். இக்குறும்படத்தை இயக்கி இருப்பவர் முத்துவீரா . இவர் ஒரு திரைப்பட இயக்கு...
குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!

குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!

சினிமா - செய்திகள்
சினிமா கனவில் இருக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் தங்கள் தகுதியை  வெளிப்படுத்திக் காட்ட குறும்படம் எடுக்கிறார்கள். அது அவர்களது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துவிடுகிறது .அப்படிப்பட்ட வகையில் உருவாகி வரும் படம்தான் 'குடிமகன்' இதை விஜய் ஆதித்யன் இயக்கியிருக்கிறார்.இந்தக் குறும்படத்தை  ஓன் ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இக் குறும்படத்தைப் பார்த்து விட்டு திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர். பாடலாசிரியர்  விவேக் 20 நிமிட குறும்படத்தை பார்த்து விட்டு 20 நிமிடங்கள் பேசி வாழ்த்தியிருக்கிறார் .படத்தின் வசனங்களை எல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டி   ஊக்கப்படுத்தி இருக்கிறார் . நடிகர் டேனியல் பாலாஜி முதலில் யார் நீங்கள் ? என்று கேட்டிருக்கிறார் . பிறகு,"கண்டிப்பாக இந்த நல்ல முயற்சிக்கு உதவி செய்வேன் நல்லா இருக்கிறது படம்." என்று கூறியிருக்கிறார் . விஜய்மில்டனிடம்  படத்தைப...
சத்யராஜ் நடிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’.

சத்யராஜ் நடிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’.

சினிமா - செய்திகள்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட சத்யராஜ் நடிக்கும் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் புதிய போஸ்டருக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறது. ஹனி பீ படநிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் இது குறித்து விவரிக்கையில், "எங்கள் படத்தின் போஸ்டருக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் கிடைத்த மகத்தான நேர்மறை வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. ரசிகர்கள் நிச்சயமாக எங்கள் படத்தை உச்சி முகர்ந்து பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையை இந்த வரவேற்பு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பெருமைகள் அனைத்தும் சத்யராஜ் சாரையே சேரும். அவர் எங்கள் படத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முழுப் படத்தையும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க...
அஜித்குமார் கேட்டாரா? அவர விட 5 வயசு எனக்கு கம்மிதான்..; கிழவின்னு சொன்ன தல ரசிகரை கிழித்த கஸ்தூரி.

அஜித்குமார் கேட்டாரா? அவர விட 5 வயசு எனக்கு கம்மிதான்..; கிழவின்னு சொன்ன தல ரசிகரை கிழித்த கஸ்தூரி.

சினிமா - செய்திகள்
தற்போது திரைப்பட துறையில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை ட்வீட்டரில் பதிவிட்டு வருகிறார். 1980 களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இவரை அஜித்குமார் ரசிகர்கள் அடிக்கடி வம்புக்கு இழுப்பது வழக்கம். அவரும் பதிலடி கொடுப்பார். இந்த நிலையில் அஜித்குமார் டிபி வைத்த ஒரு ரசிகர்… கஸ்தூரி பிரபுவுடன் நடித்த பழைய திரைப்பட வீடியோவை குறிப்பிட்டு நடிகை கஸ்தூரியை விமர்சித்திருந்தார். இது நம்ம கிழவி கஸ்தூரி தானே.. அந்த காலத்துல சூப்பர் ஃபிகரா இருந்திருப்பா போல… என கமெண்ட் செய்துள்ளார். அதைப் பார்த்த நடிகை கஸ்தூரி… “எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் சார் கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதில் காமெடி என்னன்னா, நடிகை கஸ்தூரி அஜித்குமாரை விட 5 வயது குறைவானவர். ஹ...
நண்பர்களை மறக்காமல் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய தளபதி விஜய்.!

நண்பர்களை மறக்காமல் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய தளபதி விஜய்.!

சினிமா - செய்திகள்
ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்தியா முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவாக நண்பர்கள் தினத்தில் நண்பர்கள் குழுவாக கூடி வெளியே சென்று கொண்டாடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள சூழ்நிலையில் அப்படி யாராலும் வெளியே சென்று கொண்டாட முடியாமல் நண்பர்கள் அனைவரும் கவலையுடன் இருக்கின்றனர். இதனால் வீடியோ கால் மூலம் நண்பர்கள் அனைவரும் குழுவாக ஒன்று சேர்த்து பேசி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார். தளபதி நடிகர் விஜய்யின் நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சய் இந்த புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் தனது சிறு வயது நண்பர்களுடன் நேற்று வீடியோ காலில் பேசியுள்ளார். சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட...
திரைப்பட படப்பிடிப்பு திரையரங்குகள் திறப்பது எப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு கவலையடைந்த திரையுலகினர்.

திரைப்பட படப்பிடிப்பு திரையரங்குகள் திறப்பது எப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு கவலையடைந்த திரையுலகினர்.

சினிமா - செய்திகள்
கோவில்பட்டி‌ அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்… திரைப்பட துறையினர் படப்பிடிப்புக்கு அனுமதி கோரி திரைப்படத்துறையினர் என்னையும் தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளனர். சின்னத்திரை ( சீரியல் ) படப்பிடிப்பு நடைபெற உள்அரங்கு போதுமானது. அங்கு 60 பேர் இருந்தால் கூட போதுமானது. ஆனால் திரைப்படத்தின் படப்பிடிப்பு அவுட்டோரில் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றால். எனவே அங்கே படப்பிடிப்பை பார்க்க பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக திரளுவார்கள் மேலும் படப்பிடிப்பு நடத்த பல்வேறு அனுமதி வாங்க வேண்டியுள்ளது. இப்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் த...
கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே புதிய சங்கத்திற்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா விளக்கம்

கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே புதிய சங்கத்திற்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா விளக்கம்

சினிமா - செய்திகள்
என் இனிய தயாரிப்பாளர்களே... கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்... புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையு வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும். தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாதால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம் . ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது. கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடு...