Tuesday, October 20
Shadow

சினிமா – செய்திகள்

“ கடைக்குட்டி சிங்கம் “ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !

சினிமா - செய்திகள்
2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் , கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா ,யுவராணி , தீபா , ஜீவிதா , இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை D.இமான் , ஒளிப்பதிவு R.வேல்ராஜ் , கலை வீரசமர் , இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன். படத்தில் கார்த்தி மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி Engineer , Doctor என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை...
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள்

புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள்

சினிமா - செய்திகள்
தென்னிந்திய சினிமாவில் முன்னிலை நடிகரான தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். தளபதி விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தற்ப்போது கன்னியாகுமரி விஜய் ரசிகர்கள் (ACTOR VIJAY  ONLINE WELFARE CLUB ) என்ற நற்பணி இயக்கத்தின் கீழ் புயல் ,வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட குமரி மீனவ மக்கள் குடும்பத்தினர்களுக்கு ஒரு மாதத்திர்ற்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்....
நடிகர் விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!

நடிகர் விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!

சினிமா - செய்திகள்
கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விமலும், படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இதன் பின்னணியில் வெற்றிக்கான முக்கிய தூணாக இருந்துவருபவர் தான் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்கார வேலன். குறிப்பாக ‘மன்னர் வகையறா’ பட ரிலீசின்போது விமலின் ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி ‘மன்னர் வகையறா’ வெளிவர உதவினார் சிங்காரவேலன். அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் ‘கன்னி...
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

சினிமா - செய்திகள்
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார் கமல்ஹாசன் அரசியல் பயணத்துக்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறேன் - கமல். மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளேன். ரஜினிகாந்துடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை- கமல்ஹாசன். அரசியல் பயணம் தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்; ஆண்டவனின் ஆசிர்வாதம் கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன்- நடிகர் ரஜினிகாந்த். என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசன் பாணி வேறு. பணத்துக்காகவோ, புகழுக்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நல்லது செய்வது என்பதுதான் முக்கியம் - நடிகர் ரஜினிகாந்த்....
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “  

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “  

சினிமா - செய்திகள்
மகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன்.  ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம்  என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். குமார் ஒரு நாள் என்னிடம். தான் இதை இத்தாலியில் மொழிபெயர்ப்பு செய்ய போவதாக கூறினார். நான் அவர் காமெடி பண்ணுகிறார் என்று எண்ணினேன் சரி முயற்சியுங்கள் என்றேன். மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. இத்தாலி யில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்சியாக இருந்தது. அவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன். வாழ்க்கையின் முடிவில் தான் கணக்கு பார்க்க வேண...
நீலகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்

சினிமா - செய்திகள்
கடந்த  வெள்ளிக்கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற நீலகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய ,பேரூராட்சி, மற்றும் ஊராட்சி ,ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் . இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அமைப்பு ,உதகை தெற்கு ,உதகை வடக்கு ,கீழ்  கோத்தகிரி,குன்னுர், மேலூர், பந்தலூர் ,கூடலூர் ,நெல்லியாளம்,உதகமண்டலம் ,குன்னுர் நகராட்சிகளின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் செயலர்கள் ,இணை செயலாளர்கள் ,துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . விவசாய அணி ,இளைஞர் அணி ,தகவல் தொழில்நுட்ப அணி ,மகளிர் அணி செயலாளர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு நியமிக்கிறோம் . நீலகிரி மாவட்ட அ...
இயக்குனர் பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் திரைப்படம்

இயக்குனர் பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் திரைப்படம்

சினிமா - செய்திகள்
இயக்குனர் பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு balanced திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் come backஐ வாழ்த்தி வரவேற்போம்.  ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ... ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா... நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப ...
கேத்ரின் தெரசாவை யாரும் அணூகவில்லை

கேத்ரின் தெரசாவை யாரும் அணூகவில்லை

சினிமா - செய்திகள்
கேத்ரின் தெரசா தமிழில் நடித்த கணிதன் படத்தை தெலுங்கில் தயாரிக்க உள்ளதாகவும் அதில் கேத்ரின் தெரசாவே நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தமிழில் இப்படம் வெளியானபோது அதில் தெரசாவின் நடிப்பு பெரிதாக பாராட்டப்படவில்லை. மேலும் தனது காட்சிகள் குறைவாக இருந்ததாகவும் எண்ணியிருந்தார். தற்போது தெலுங்கில் அப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்வருவது தவறு. கணிதன் ரீமேக்கில் நடிக்க கேட்டு யாரும் தன்னை அணூகவில்லை என கூறியதுடன் அப்படி ஒரு வேளை நடித்தாலும் அதில் தனக்கு தமிழில் அலிக்கப்பட்ட காட்சிகளைவிடவும் அதிக காட்சிகள் இருந்தால்தான் நடிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்....
கதவை அடைத்த ரஜினிகாந்த்! கஜ கர்ணம் போடும் ராகவா லாரன்ஸ்!

கதவை அடைத்த ரஜினிகாந்த்! கஜ கர்ணம் போடும் ராகவா லாரன்ஸ்!

சினிமா - செய்திகள்
மக்கள் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்ட லாரன்ஸ், ரஜினி ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றியதை தொடர்ந்து, ‘ஐயா.. சாமீ அது எனக்கு தெரியாம நடந்த விஷயம்’ என்று டைரக்டர் மீது பழியை தூக்கிப் போட்டுவிட்டார். ஆனால் தனக்கிருக்கும் ஞான ஒளியால் தனக்கு முன்னாலிருக்கும் ஊன ஒளியை கண்டு கொள்கிற அளவுக்கு புத்தி சாதுர்யம் படைத்த ரஜினி, அந்த நிமிஷத்திலிருந்தே லாரன்ஸ்சுக்கு புள்ளி வைத்துவிட்டார். ஜல்லிக்கட்டு விஷயத்திலேயே லாரன்ஸ் செய்த அரசியலை நமுட்டு சிரிப்போடு கவனித்துக் கொண்டிருந்தவர்தானே ரஜினி? அரசியலில் நுழைந்து விட்ட இந்த நேரத்தில் யார் யார் தன்னுடன் இருக்க வேண்டும். யார் யார் இருக்கக் கூடாது என்பதை அறியாதவரா அவர்? கடந்த சில மாதங்களாகவே ரஜினியை நேரில் சந்திக்க முன் அனுமதி கேட்டு வருகிறாராம் லாரன்ஸ். ஆனால் அங்கிருந்து எந்த வித பச்சை விளக்கும் இந்த வினாடி வரைக்கும் எரியவில்லை என்பதுதான்...
‘காற்று வெளியிடை’ தோல்வி, கார்த்தியைக் காப்பாற்றிய ‘தீரன்’

‘காற்று வெளியிடை’ தோல்வி, கார்த்தியைக் காப்பாற்றிய ‘தீரன்’

சினிமா - செய்திகள்
நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார். வந்ததும் இயக்குனர் மணிரத்னத்திடம் ‘ஆய்த எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அதன் பின் ‘பருத்தி வீரன்’ படம் மூலம் வியக்கத்தக்க அறிமுகமாக தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்த இரண்டாவது படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளிவர மூன்று வருடங்கள் ஆனது. அந்தப் படம் தோல்வியில் தான் முடிந்தது. அடுத்து வெளிவந்த ‘பையா’ படம்தான் அவருக்கு வெற்றியைத் தந்தது. தொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி பார்த்து வந்த கார்த்தி இந்த பத்து வருடத்தில் 15 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவற்றில் ‘பருத்தி வீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், தோழா’ ஆகியவை அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால், கடைசியாக வெளிவந...