
கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைத்த தரணி ரட்ச மகா யாகத்தை தொடர்ந்து நடத்த பிரதமரும், இந்து அமைப்புகளும் தமிழக முதல்வரும் முன்வரவில்லை. சூரியன் நம்பூதிரி சுவாமிகள் குற்றச்சாட்டு .
சென்னை 11 ஏப்ரல் 2021
கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைத்த தரணி ரட்ச மகா யாகத்தை தொடர்ந்து நடத்த பிரதமரும், இந்து அமைப்புகளும் முன்வரவில்லை. சூரியன் நம்பூதிரி சுவாமிகள் குற்றச்சாட்டு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் 'மருந்தும், மந்திரமும்' பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது.
தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி ரக்ஷ மஹா யாகத்தைச் செய்தால், இதன் பாதிப்பிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுதலை பெறலாம்.
ஆனால் இதனை நடத்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், பாரத பிரதமரும், ஹிந்து அமைப்புகளும் முன்வரவில்லை என சூரியன் நம்பூதிரி சுவாமிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை முழுவதுமாக குறைக்க தரணி ரட்ச மகா யாகத்தை மூன்று கட்டங்களாக நடத்த வேண்டும...