Thursday, January 27
Shadow

TAMIL CINEMA NEWS

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது.

TAMIL CINEMA NEWS
சென்னை 24 ஜனவரி 2022 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்ஷன் ட்ராமாவான மகான் பிப்ரவரி-10 அன்று Prime Video-இல் உலகளவில் வெளியிடப்படுகிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், வ...
இயக்குநர் CS அமுதன் – விஜய் ஆண்டனி கூட்டணியி உருவாகும் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகியகள் நடிக்கிறார்கள் !

இயக்குநர் CS அமுதன் – விஜய் ஆண்டனி கூட்டணியி உருவாகும் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகியகள் நடிக்கிறார்கள் !

TAMIL CINEMA NEWS
சென்னை 24 ஜனவரி 2022இயக்குநர் CS அமுதன் - விஜய் ஆண்டனி கூட்டணியி உருவாகும் “ரத்தம்” படத்தில் மூன்று நாயகியகள் நடிக்கிறார்கள் ! மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா & ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் “ரத்தம்” படத்தில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்னர். தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமாக திகழும் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, வர்த்தக வட்டத்திலும் லாபம் தரும் நடிகராக பாராட்டு பெற்றுள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோடியில் ஒருவன்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் திரைத்துறை மதிப்பு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும் அவரது திரைப்படங்களுக்கான வணிக வட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அவரது அடுத்தடுத்த பட வரிசைகள் மிகவும் நம்பிக்...
ஈட்டி, ஐங்கரன் திரைப்படங்களின் இயக்குனர் ரவிஅரசுவுக்கு பிறந்த தினத்தை ஒட்டி திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈட்டி, ஐங்கரன் திரைப்படங்களின் இயக்குனர் ரவிஅரசுவுக்கு பிறந்த தினத்தை ஒட்டி திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TAMIL CINEMA NEWS
சென்னை 23 ஜனவரி 2022 ஈட்டி, ஐங்கரன் திரைப்படங்களின் இயக்குனர் ரவிஅரசுவுக்கு பிறந்த தினத்தை ஒட்டி திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் 2015-ல் வெளியாகிய திரைப்படம் ஈட்டி. வசூல்  ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சவாலான தடகள சாம்பியனின் கதையை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் அழுத்தமாகவும் ஜனரஞ்சகமாகவும் அளித்திருந்தார் இயக்குனர் ரவிஅரசு. குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தனது இயக்கத்தில் இரண்டாவது படமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஐங்கரன் படத்தை இயக்குநர் ரவிஅரசு இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் பலரின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஐங்கரன் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இயக்குநர் ரவிஅரசு இன்று (ஜனவரி 23-ஆம் தேதி) தன...
குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகரின் புதுமையான முயற்சி.

குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகரின் புதுமையான முயற்சி.

TAMIL CINEMA NEWS
சென்னை 23 ஜனவரி 2022 குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகரின் புதுமையான முயற்சி. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'கருங்காலி' மற்றும் 'நான் சிகப்பு மனிதன்' புகழ் நடிகர் சேத்தன் சீனு, 12 விடுதலை வீரர்களின் வேடங்களில் பிரமாண்ட போட்டோஷூட் செய்துள்ளார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று காலை 10.05 மணி முதல் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். ஜனவரி 23 முதல் முன்னோட்டம் வெளியிடப்படும். இந்த முயற்சியைப் பற்றி பேசிய சேத்தன் சீனு, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியிடம் இந்த யோசனையை பற்றி கூறியதாக தெரிவித்தார். "இந்த முயற்சி ஒரு திரைப்படத்திற்காக தொடங்கப்பட்டது. சில சுதந்திர போராட்ட வீரர்களை திரையில் பிரதிபலிக்க நான் விரும்பினேன், அதை...
பிறந்த நாள் கொண்டாட்டமாக, ஜனவரி 27 முதல், சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

பிறந்த நாள் கொண்டாட்டமாக, ஜனவரி 27 முதல், சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

TAMIL CINEMA NEWS
சென்னை 22 ஜனவரி 2022 பிறந்த நாள் கொண்டாட்டமாக, ஜனவரி 27 முதல், சமூக தலைப்புகளில் ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். தென்னிந்திய திரைத் துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஸ்ருதிஹாசனின் சமூக வலைத்தள பக்கத்தை, தொடர்ந்து பல நாட்களாக அழைப்புகள் மற்றும் வாழ்த்து குறுஞ்செய்திகளால் ரசிகர்கள் மூழ்கடித்துவிட்டனர். அனைத்து ரசிகர்களின் பொங்கி வழியும் அன்பில் மூழ்கிதிளைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ஒவ்வொரு ரசிகருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முயன்று வருகிறார். மேலும் இந்த ஆண்டு, ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளில், நமது சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட ...
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் !

TAMIL CINEMA NEWS
சென்னை 21 ஜனவரி 2022 ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற “ஜெய்பீம்” திரைப்படம் ! 2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின்  சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு,  இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் "சூரரைப் போற்று" 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால்  ஒடுக்...
“ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் நடிகர் சுந்தர் C

“ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் நடிகர் சுந்தர் C

TAMIL CINEMA NEWS
சென்னை 21 ஜனவரி 2022 "ஒன் 2 ஒன்" படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் நடிகர் சுந்தர் C. 24 HRS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் படம் "ஒன் 2 ஒன்". சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுந்தர் C பிறந்த நாளை முன்னிட்டு ஒன் 2 ஒன் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுந்தர் C கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்து கூறிய அனைருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் C கொண்டாடியது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்....
பிரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2022 இன் புதிய தொடர்  அதன் தலைப்பை வெளியிட்டது தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 

பிரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2022 இன் புதிய தொடர்  அதன் தலைப்பை வெளியிட்டது தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் 

TAMIL CINEMA NEWS
சென்னை 21 ஜனவரி 2021 பிரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2022 இன் புதிய தொடர்  அதன் தலைப்பை வெளியிட்டது தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர். தலைப்பின் செயலாக்கம் அதிரடி நேர்முக அற்புதக்காட்சியாக வெளிப்பட்டது  Link: https://youtu.be/cRCDPixc_3o கைகளால் செதுக்கப்பட்ட மரத்தாலான மலை இடுக்குகளினூடே ஆர்ப்பரித்து ஓடும்  நதிகளைப் போல உண்மையாகாவே காய்ச்சி எடுத்த உலோகம் உருகியோடி வெள்ளியாய் மிளிர்ந்து எழுத்துக்களை வடிவமைப்பதை காணுங்கள் கல்வர் சிட்டி, கலிபோர்னியா- ஜனவரி19, 2022, பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் க்கு அதிகாரபூர்வமான  பெயர் சூட்டப்பட்டுவிட்டது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அது மறைமுகமாக சுட்டிக்காட்டிவிட்டது  தொலைக்காட்சித் தொடரின் முழுத் தலைப்பும் இன்று வெளியிடப்பட்டது மற்றும் டோல்கியனின் செகண்ட் ஏஜ் உடன் : ஃபோர்ஜிங...
பொறி பறக்கும் விஷால் நடிக்கும் #வீரமேவாகைசூடும் டிரைலர்..” நடிகர் மாரிமுத்து.

பொறி பறக்கும் விஷால் நடிக்கும் #வீரமேவாகைசூடும் டிரைலர்..” நடிகர் மாரிமுத்து.

TAMIL CINEMA NEWS
Chennai 21 January 2022 பொறி பறக்கும் விஷால் நடிக்கும் #வீரமேவாகைசூடும் டிரைலர்.." நடிகர் மாரிமுத்து. 'வீரமே வாகை சூடும்' இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து VFF நிறுவனமும், விஷால் சாரும் காட்டும் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி. அதையும் வ...
நடிகர் சூர்யா சாருடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் – ‘ஜெய் பீம் ‘ நடிகர் ராவ் ரமேஷ்.

நடிகர் சூர்யா சாருடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் – ‘ஜெய் பீம் ‘ நடிகர் ராவ் ரமேஷ்.

TAMIL CINEMA NEWS
சென்னை 21 ஜனவரி 2022 நடிகர் சூர்யா சாருடன் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன் - 'ஜெய் பீம் ' நடிகர் ராவ் ரமேஷ். நடிகர் சூர்யா தயாரித்து நடிக்க, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் பெரு வெற்றி அடைந்து இருக்க, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் கவனம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாமல் ஆச்சரியப்படுத்திய ஒரு நடிகர் ,அட்டர்னி ஜெனரல் ஆக வந்த ராவ் ரமேஷ். அவரது பார்வை, பேச்சு, உடல்மொழி அனைத்துமே அவர் ஒரு பண்பட்ட நடிகர் என்று உணர்த்தியது. அது உண்மைதான். அவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அந்தப்படங்களில் அவரது அசாதாரண நடிப்பாற்றலைப் பார்த்தே ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் அவரை AG வேடத்துக்கு தேர்வு செய்திருக்கிறார். "நான்தான் அந்த வேடத்துக்குப் பொருத்...
CLOSE
CLOSE