சிக்லெட்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5/ 5.

நடிகர் & நடிகைகள் :- சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான், மனோபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ஆறந்தை ராஜகோபால், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- முத்து.

ஒளிப்பதிவாளர் :- கொளஞ்சி குமார்.

படத்தொகுப்பாளர் :- விஜய் வேலுக்குட்டி.

இசையமைப்பாளர் :- பாலமுரளி பாலு.

தயாரிப்பு நிறுவனம் :- எஸ் எஸ் பி பிலிம்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஸ்ரீனிவாசன் குரு ஏ – சவர்ணா ஸ்ரீ.

ரேட்டிங் :- 2.5/ 5.

சிறு வயது முதல் கதாநாயகிகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா இவர்கள் மூவரும் இணைபிரியாத தோழிகளாக இருக்கிறார்கள்.

கதாநாயகிகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஒரே பள்ளியில் இவர்கள் மூவரும் படித்து வருகிறார்கள்.

இவர்கள் மூவருடைய பெற்றோர்களும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களுக்குமதங்கள்  பிள்ளைகள் மீது மிகப்பெரிய அளவில் கனவு ஒன்று இருக்கும்.

அதே  சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் கதாநாயகிகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா மூவரும் தங்களது வயது கோளாறில் காரணமாக காதல், டேட்டிங் போன்ற பலவிதமான விசயங்களில் ஈடுபாடு அதிக அளவில் காட்டுகிறார்கள்.

அதன்படி, கதாநாயகிகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா முவரும் தங்களது மனதுக்கு பிடித்த ஆண் நண்பர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசம் அனுபவிப்பதற்காக தனது பெற்றோர்களிடம் தமது தோழிக்கு திருமண வரவேற்பு என பொய் சொல்லிவிட்டு தன் ஆண் நண்பர்களுடன் செல்கிறார்கள்.

தான் பெற்ற பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு தப்பான வழிக்கு சென்று இருக்கிறார்கள் என உண்மை தெரிய வருகிறது, தங்களது பிள்ளைகளை தேடி மூன்று பெற்றோர்களும் அவர்களை தேடி செல்கிறார்கள்.

இறுதியில், கதாநாயகிகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா மூவரின் ஆசை நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? அல்லது பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களின் கனவு பலித்ததா? பலிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘சிக்லெட்ஸ்’. திரைப்படத்தின் மீதி கதை.

இந்த சிக்லெட்ஸ் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வருண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாத்விக் வர்மா, சிக்கு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளைஞர் மூவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

இந்த சிக்லெட்ஸ் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகிகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

டீன் ஏஜ் வயது கோளாறில் கூத்து கும்பலம் என ஜாலியாக வாழ நினைக்கும் இளசுகள் அனைவரும் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள், உடல் மொழியில் கவர்ச்சி என திரைப்படம் முழுவதும் காம வசனங்களை மட்டுமே பேசி நடித்திருக்கிறார்கள்.

மூன்று கதாநாயகிகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா பெற்றோர்களாக நடித்திருக்கும்

சுரேகா வாணி, ஸ்ரீமன், அறந்தை ராஜகோபால் மற்றும் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டப்பிங் ஜானகி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, பல இடங்களில் சிரிக்க வைக்கவும் செய்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு கலர் கலராக காண்பித்திருக்கிறார்.

பெரும்பாலும் கேமராவின் கோணங்கள் அனைத்தும் கதாநாயகிகள் மூவரின் உடலை சுற்றியே வலம் வருவதோடு, திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் பெருமூச்சு விட வைக்கும் விதத்தில் அவர்களுடைய அங்கங்கள் அனைத்தையும் மிக அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி படியாக உள்ளது.

பாடல் வரிகள் அனைத்து வார்த்தைகள் புரியும்படியும் இருக்கிறது.

பின்னணி இசை திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பலான பலான மேட்டர்கள் பற்றி, வசனம் மற்றும் காட்சிகள் மூலம் சொல்லிவிட்டு, இறுதியில் இதெல்லாம் தப்பு, என்று சொல்லும் வழக்கமான பாணியில் பயணிப்பதோடு, திரைப்படம் முழுவதும் ஆபாசமான காட்சிகளையும், அருவருப்பான வசனங்களையும் வைத்து இளைஞர்களை ஈர்க்க நினைத்திருக்கிறார் இயக்குநர் முத்து.

மொத்தத்தில், இந்த சிக்லெட்ஸ் திரைப்படம் கல்லூரி இளைஞர்களை மத்தியில் பரபரப்பாக பேசப்படும்.