தமிழகத்தில் ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை 15 மே 2021தமிழகத்தில் ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மற்றும் தள்ளு வண்டிகள் இன்று முதல் செயல்பட அனுமதி இல்லை.

தனியாக செயல்படும் மளிகை கடைகள் காய்கறிகள் கடைகள் இறைச்சி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதி; பிற கடைகள் திறக்க தடை.

ATM, பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதி தமிழக அரசு அறிவிப்பு.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கவும் அதிக தூரம் பயணிக்க முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்

E-Commerce நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி

ஏற்கனவே அறிவித்துள்ளபடி ஞாயிறு முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் – தமிழக அரசு அறிவிப்பு.

திருமணம், முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு வரும் 17ஆம் தேதி முதல் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு.

இன்று முதல் டீக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் இயங்க அனுமதி கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.

error: Content is protected !!