தனது பிறந்தநாளை சரக்கு படப்பிடிப்பில் பலாப்பழத்தை வெட்டி.  கொண்டாடிய நடிகர் மன்சூர் அலிகான்.!!!

சென்னை 21 பிப்ரவரி 2023 தனது பிறந்தநாளை சரக்கு படப்பிடிப்பில் பலாப்பழத்தை வெட்டி.  கொண்டாடிய நடிகர் மன்சூர் அலிகான்.!!!

தன் பிறந்தநாளை கண்ட கண்ட ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி, விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த உண்மையான ‘தமிழ் தேசிய மாடல்’ மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் திரைப்படம் “சரக்கு”! படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்!

‘சரக்கு’ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் ஜோடியாக வலினா நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்!

மன்சூர் அலிகானின் “சரக்கு”!

இயக்கம் ஜே.ஜெயக்குமார், ஒளிப்பதிவு அருள் வின்சென்ட், இசை சித்தார்த் விபின்,
மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்!