தெய்வம் மச்சான் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3./ 5.

நடிகர் நடிகைகள் :- விமல், பாண்டியராஜன், பால சரவணன், ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, அனிதா சம்பத், வாத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சாரவி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மார்ட்டின் நிர்மல் குமார்.

ஒளிப்பதிவு :- கேமில் ஜே அலெக்ஸ்.

படத்தொகுப்பு :-  இளையராஜா S.

இசை :-  காட்வின் ஜெ. கோடன் & அஜீஸ்.

தயாரிப்பு நிறுவனம் :-  உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- உதய் குமார் – கீதா உதய் குமார் & M P வீரமணி.

ரேட்டிங் :- 3./ 5.

கிராமத்தில் கதாநாயகன் விமல் தன்னுடைய தந்தை பாண்டியராஜன் தங்கை அனிதா சம்பத் மற்றும் சகோதரர் அண்ணி குழந்தைகள் என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

தனது தங்கை அனிதா சம்பத்திற்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள்.

ஆனால் பல காரணங்களால் தன் தங்கை அனிதா சம்பத்தை பார்க்க வரும் மாப்பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அடிக்கடி திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பதால் அந்த குடும்பமே மன கஷ்ட்டத்தில் இருக்கிறது.

கதாநாயகன் விமல் தங்கை அனிதா சம்பத்தை அதே கிராமத்தில் பண்ணையாராக உள்ள ஆடுகளம் நரேனுடைய தம்பிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்க, அவரின் வயது அதிகமாக இருப்பதால் அந்த பண்ணையார் குடும்பத்து சம்பந்தத்தையும் தட்டிக் கழித்து விடுகின்றனர்.

தனது தங்கைக்கு பொள்ளாச்சி மில்லில் வேலை பார்க்கும் நல்ல மாப்பிள்ளை கிடைக்க எப்படியாவது தன் தங்கையின் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று கதாநாயகன் விமல் தீவிரம் காட்டி அந்த மாப்பிள்ளையை பேசி முடிக்கிறார். .

தங்கை அனிதா சம்பத்திற்கு பார்த்த மாப்பிள்ளையின் தங்கையை பார்த்த கதாநாயகன் விமல் அவர் மீது காதல் கொள்கிறார்.

ஒருவழியாக கதாநாயகன் விமலில் தங்கை அனிதா சம்பத்தின் திருமண ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பண்ணையார் ஆடுகளம் நரேனின் தம்பிக்கு கதாநாயகன் விமலின் தங்கை அனிதா சம்பத்தை திருமணம் செய்து வைக்காததால் இந்த திருமணத்தை நிறுத்த பண்ணையார் ஆடுகளம் நரேன் முயற்சி செய்கிறார்.

இதற்கிடையே கதாநாயகன் விமலின் கனவில் குதிரையில் வரும் சாட்டைக்காரன், யார் இறந்துவிட போகிறார்கள் என்பதை முன் கூட்டியே கூறிவிடுகிறார்.

கதாநாயகன் விமலின் கனவில் குதிரையில் வரும் சாட்டைக்காரன் சொன்னபடியே அந்த இறப்புகள் நடந்து விடுகிறது.

தன் தங்கை அனிதா சம்பத்தின் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு கதாநாயகன் விமலின் கனவில் வரும் சாட்டைக்காரன் இரண்டு நாட்களில் உன் மச்சான் இறந்துவிடுவார் என்று கூறுகிறார்.

இதனால் பதறிப்போகும் கதாநாயகன் விமல் தனது தங்கையின் திருமணத்தை உடனடியாக நிறுத்த முயற்சி செய்கிறார்.

இறுதியில் தங்கை அனிதா சம்பத்தின் திருமணம் நடந்ததா? நடக்கவில்லையா? கதாநாயகன் விமல் கனவில் மச்சம் இறந்து விடுவார் என சொன்ன விஷயம் என்ன ஆனது? என்பதுதான் இந்த தெய்வ மச்சான் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த தெய்வ மச்சான் திரைப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்துள்ளார்.

வழக்கம்போல் அவருடைய எதார்த்த நடிப்பு திரைப்படத்திற்கு மிகவும் சரியாக பொருந்தியுள்ளது.

தெய்வ மச்சான் திரைப்படத்தில் மண் மனம் மாறாமல் நடித்து கொடுத்துள்ளார் விமல்.

கதாநாயகன் தங்கையாக வரும் அனிதா சம்பத்திற்கு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பால சரவணின் காமெடி ஆங்காங்கே திரைப்படத்தில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நடிகர் விமன் நடிகர் பாலா சரவணா இணைந்து நடித்த விலங்கு இணையத்துடன் மிகப்பெரியதாக வெற்றி பெற்றது.

இவள் இருவரின் நடிப்பில் வெளியாகியுள்ள தெய்வமச்சான் திரைப்படமும் மிகப்பெரியதாக வெற்றி பெறும்.

மேலும் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாப்பாத்திரங்கலும் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் அவர்களின் பணியை மிகவும் சரியாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ் கிராமத்து பின்னணியை ஒளிப்பதிவில் மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் காட்வின் ஜே கோடன் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் இசை மற்றும் பின்னணி இசை ஓகே என்ற அளவிற்கு கொடுத்துள்ளார்.

தெய்வ மச்சான் திரைப்படத்தை குடும்ப உறவுகளை காமெடி கலந்த திரைப்படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் மார்டின் நிர்மல் குமார்.

வழக்கமான கதையை காமெடி கலந்து கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் மார்டின் நிர்மல் குமார்.

தெய்வம் மச்சான் திரைப்படம் பார்வையாளர்கள் காமெடியை ரசிக்கும் படி இடம்பெற்றுள்ளது.

மொத்தத்தில் தெய்வ மச்சான் திரைப்படம் காமெடியாக விருந்து வைத்துள்ளனர்.