டெவில் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.25. / 5.

நடிகர் & நடிகைகள் :- விதார்த், திரிகன், பூர்ணா, சுபாஸ்ரீ, மிஷ்கின், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆதித்யா.

ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் முத்துக்குமார்.

படத்தொகுப்பாளர் :- இளையராஜா. எஸ்

இசையமைப்பாளர் :- மிஸ்கின்.

தயாரிப்பு நிறுவனம் :- மாருதி பிலிம்ஸ் & எச் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஆர். ராதாகிருஷ்ணன் & எஸ்.ஹரி, பி.ஞானசேகர்.

ரேட்டிங் :- 3.25. / 5.

கதாநாயகன் விதார்த் கதாநாயகி பூர்ணா இருவர் வீட்டில் உள்ள பெற்றோர்கள்  நிச்சயிக்கப்பட்ட திருமணமாக கதாநாயகன் விதார்த்துடன் கதாநாயகி பூர்ணாவின் திருமணம் நடைபெறுகிறது.

கதாநாயகன் வித்தார்த் வக்கீலாக இருக்கிறார் திருமணத்திற்கு முன்பே தன்னுடன் வேலை பார்க்கும் சுபஶ்ரீயின் அழகில் மயங்கி அவள் மீது காதல் கொள்ள அந்த காதல் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் கதாநாயகன் விதார்த் மற்றும் சுபஸ்ரீ ஒன்றாக இருக்கும் நேரத்தில் கதாநாயகி பூர்ணா பார்த்து விட அதிர்ச்சியாகும் கதாநாயகி பூர்ணா கதாநாயகன் விதார்த்துடன் சண்டை போட்டு காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மற்றொரு நாயகன் திரிகுன் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்படுகிறது.

இதில் மற்றொரு நாயகன் திரிகுனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது.

கதாநாயகி பூர்ணாவால் ஏற்பட்ட விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ஆதரவில்லாமல் தனிமையில் இருக்கும் மற்றொரு நாயகன் திரிகுனுக்கு துன்பத்தை ஏற்படுத்திய கதாநாயகி பூர்ணாவுக்கு இது குற்ற உணர்வாக தோன்றுகிறது.

கணவரின் துரோகத்தால் விரக்தியில் இருக்கும் கதாநாயகி பூர்ணா, திரிகுணின் திடீர் நட்புடன் பயணிக்கிறார்.

இவர்களுடைய நட்பின் நெருக்கம் அதிகரிக்கும் போது, மற்றொரு கதாநாயகன் திரிகுணுக்கு கதாநாயகி பூர்ணா மீது காதல் ஏற்படுகிறது.

இதனிடையே மற்றொரு நாயகன் திரிகுனுக்கு ஆதரவாக கதாநாயகி பூர்ணா அடிக்கடி சந்திக்கிறார்.

தன் அம்மாவின் அரவணைப்பில் கதாநாயகி பூர்ணாவை பார்க்கும் மற்றொரு நாயகன் திரிகுனுக்கு பூர்ணாவின் மேல் காதல் ஏற்படுகிறது.

இந்நிலையில் தன் ஆசை நாயகி சுபஸ்ரீ ஜிம் ட்ரெயினருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொள்ளும் கதாநாயகன் விதார்த் மனம் திருந்தி பூர்ணாவை தேடி வருகிறார்.

கதாநாயகி பூர்ணாவும் மற்றொரு நாயகன் திரிகுன் பரிசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வரும் போது, அவருடைய கணவர் கதாநாயகன் விதார்த் தான் செய்த தவறை உணர்ந்து தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறார்.

முடிவில் மனம் திருந்தி தேடி வரும் தன் கணவர் கதாநாயகன் விதார்த்தை கதாநாயகி பூர்ணா ஏற்று கொண்டு தனது கணவன் மீது காதல் கொள்ளும் கதாநாயகி பூர்ணாவின் இல்லற வாழ்க்கை மிகவும் இனிமையாக மாறுகிறது.

கதாநாயகி பூர்ணாவின் அழகில் மயங்கி காதல் வயப்பட்ட மற்றொரு நாயகன் திரிகுனின்
கதாநாயகி பூர்ணாவை மறக்க முடியாமல் தவிக்கிறார்.

இறுதியில் கதாநாயகி பூர்ணா மீது திரிகனுடன் ஏற்பட்ட காதல் தவிப்பு என்ன ஆனது? என்பதுதான் இந்த டெவில் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டெவில் திரைப்படத்தில் கதாநாயகனாக விதார்த் நடித்துள்ளார்.

கதாநாயகி பூர்ணாவின் கணவராக நடித்திருக்கும் கதாநாயகன் விதார்த், ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி ஒரே காட்சியில் திரைப்படம் பார்க்கும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.

கதாநாயகன் விதார்த்துக்கு இப்படிப்பட்ட கதபாத்திரம் புதிது என்றாலும், அதை புரிதலோடு செய்து கைதட்டல் வாங்குகிறார்.

இந்த டெவில் திரைப்படத்தில் கதாநாயகியாக பூர்ணா நடித்திருக்கிறார்.

திருமணமான பெண்கள் படுக்கையில் கணவரிடம் எதிர்பார்க்கும் விசயங்கள் எதுவும் நடக்காமல் போனால் எப்படி தவிப்பார்கள் என்பதை தனது கண்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கும் கதாநாயகி பூர்ணா.

திருமணமான பெண்களுக்கான ஏக்கம், தவிப்பு, காதல், கோபம், தடுமாற்றம் என அனைத்து உணர்ச்சிகளையும் அளவாக கையாண்டிருக்கும் கதாநாயகி பூர்ணா, திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை தனது தோள் மீது சுமந்திருக்கிறார்.

கதாநாயகி பூர்ணா இயல்பான நடிப்பில் உடல் மொழியில் ஒவ்வொரு அசைவுகளிலும் வெகுளி , ஏக்கம், தவிப்பு, காதல்,அலறல், கோபம், தடுமாற்றம் என பல பரிணாமங்களில் உணர்வுபூர்வமாக கதையின் நாயகியாக திரைப்படம் முழுவதும் பாராட்டும்படியான நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்.

இந்த டெவில் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக திரிகன் நடித்திருக்கிறார்.

தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு சரியான நபர் என்று நிரூபிக்கும் வகையில் திரிகுண் நடித்திருக்கிறது.

கதாநாயகன் விதார்த், கதாநாயகி பூர்ணா மற்றும் மற்றொரு நாயகன் திரிகுண் ஆகியோரை சுற்றி நகரும் கதையை இந்த மூன்று பேருமே தங்களது நடிப்பு மூலம் திரைப்படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள்.

சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின், அந்த கதாபாத்திரத்தில் மூலம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது பெருத்த ஏமாற்றம்.

ஒரு சாதாரண முக்கோண முக்கோண காதல் கதை என்றாலும் அதை சுவாரஸ்யமாக சொல்வதற்கு படத்தொகுப்பாளர் இளையராஜா அதிக அளவில் மெனக்கெட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் இரவு நேரக் காட்சிகள் அனைத்தையும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் நடித்திருக்கும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மிஷ்கினின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும்படி அமைந்திருக்கிறது.

ஆனால், இசையமைப்பாளர் மிஷ்கின் பின்னணி இசையில் சொதப்பியிருக்கிறார்.

குறிப்பாக வயலின் இசைக்கருவியும், அது எழுப்பும் ஒலியும் இனிமையாக இருந்தாலும், அந்த இசைக்கருவி மீது வெறுப்பு ஏற்படும் வகையில் இசையமைப்பாளர் மிஷ்கின் அளவுக்கு அதிகமாக வாசித்திருக்கிறார்.

மனம் தடுமாறி சூழ்நிலை காரணமாக தடம் மாறும் மூன்று கதாபாத்திரங்களின் கதையை மையமாக வைத்து ஆபாச கலப்பில்லாத திரைக்கதை அமைப்புடன் யாரும் எதிர்பார்த்த திருப்புமுனையான இறுதிக்கட்ட காட்சிகளில் ரசிகர்களுக்கு திகிலான திரில்லர் திரைப்படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறார் இயக்கிய இயக்குனர் ஆதித்யா.

தவறான தொடர்புகள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு, தவறு செய்பவர்களை மன்னிப்போம், மறப்போம் என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா.

மொத்தத்தில் இந்த ‘டெவில்’  பார்க்க வேண்டிய திரைப்படம்.