தண்டு பாளையம் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், டைகர் வெங்கட், சுமா ரங்கநாத், பூஜா காந்தி,  முமைத்கான், பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஈஸ்வரன், மற்றும் பலர்

எழுத்து & இயக்கம் :- டைகர் வெங்கட்’ K.T நாயக்.

ஒளிப்பதிவாளர் :- பி. இளங்கோவன்.

படத்தொகுப்பாளர் :- பரீதி மோகன், பாபு ஸ்ரீவத்சவ்.

இசையமைப்பாளர் :- ஜித்தன் கே ரோஷன்.

தயாரிப்பு நிறுவனம் :- வெங்கட் மூவிஸ்.

தயாரிப்பாளர் :- டைகர் வெங்கட்.

ரேட்டிங்:- 1.25../5.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹோஸ்கோட் தாலுக்காவில் உள்ள கிராமம் தான் தண்டுபாளையம் என்ற ஊரில் வாழ்ந்து கன்னடம் பேசும் ஊரென்றாலும் இவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி பரம்பரை பரம்பரையாக கொலை கொள்ளை கற்பழிப்பு என செய்து வருகிறார்கள்.

தங்களது வறுமையை பண வசதி படைத்தவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதை தொழிலாக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் அதில் எந்த ஒரு தர்மமும் இல்லாத கொடூரர்கள். குழந்தைகள், முதியோர்கள் என கொடூரமாக கொலை செய்யவும், பெண்களை அனைவரும் சேர்ந்து கூட்டுக் கற்பழிப்பு செய்து கொள்ளவும் தயங்காதவர்கள் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் .

அப்படி அந்த கும்பலை சேர்ந்த சுமன் ரங்கநாதன் எட்டு பேர் கொண்ட கும்பலை வழிநடத்திக் கொண்டு கொள்ளையடிக்கும் வீட்டில் உள்ளவர்களை சித்திரவதை செய்து, அவர்களின் சொந்த நோக்கங்களுக்காக பணம், ஆபரணங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களைப் பறிப்பது கற்பழிப்பது மட்டுமே அவளுடைய ஒரே குறிக்கோள் இருந்து வருகிறார்கள்.

அந்த கும்பலை பிடிக்க, கதாநாயகன் டைகர் வெங்கட்யை சிறப்பு காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கதாநாயகன் டைகர் வெங்கட் இந்த கும்பலை எவ்வாறு பிடித்தாரா.? பிடிக்கவில்லையா.? அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த தண்டுப்பாளையம் திரைப்படத்தின் மீதிக்கதை.

சுமன் ரங்கநாதன் சிறப்பாக நடித்துள்ளார்,

சுமன் ரங்கநாதன் கொடுத்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து மிரட்டியுள்ளார்.

டயலாக்குகளை அந்த ஊர் ஸ்லாங்கில் அழகாக பேசி நடித்திருக்கிறார்.

வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் சில காட்சிகளில் வந்தாலும் அவர்களது பங்கை சிறப்பாக செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

காவல்துறை சிறப்பு அதிகாரியாக வரும் டைகர் வெங்கட் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் டைகர் வெங்கட் சீரியசாக நடிப்பது சில சில காட்சிகளை காமெடி பீஸ் போல தெரிகிறார் .

இந்த தண்டு பாளையம் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் இளங்கோவன் கிராமப்புற காட்சிகளை ஒளிப்பதிவின் மூலம் மிக அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜித்தின் கே ரோஷனின் மகா மட்டமாக பின்னணி இசை மிகவும் கேவலமாக உள்ளது.

கர்னாடக்காவில் இருந்த அச்சுறுத்தும் கொலை கொள்ளை கற்பழிப்பு என செய்யும் கும்பலை மையமாக வைத்து உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இயக்குனர் டைகர் வெங்கட் ‘ K.T நாயக். ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

படத்தொகுப்பு காட்சிகள் ஒன்றுக்கும் ஒன்றுக்கும் பிணைப்பு இல்லை.

திரைப்படத்தின் கதை திரைக்கதையில் கொஞ்சமாவது கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

உங்க தண்டு பளையம் திரைப்படத்தில காட்சிப் படுத்திருக்கும்  கற்பழிப்பு காட்சிகளும் மற்றும் கொலை கொள்ளை சம்பவங்கள் திரையரங்குகளில் திரைப்படம்  பார்க்கும் பார்வையாளர்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்துகிறது.

திரைப்படத்தில் காட்டப்படும் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நிகழ கூடியதாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் – இந்த தண்டுபாளையம் திரைப்படம் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.