‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை தமிழக வெளியிட்டு உரிமையை ஜம்பாரா என்டர்டைன்மெண்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி கைப்பற்றி இருக்கிறார்!!

‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை தமிழக வெளியிட்டு உரிமையை ஜம்பாரா என்டர்டைன்மெண்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி கைப்பற்றி இருக்கிறார்!!

சென்னை 12 பிப்ரவரி 2024 ‘சிலந்தி’ ‘ரணதந்த்ரா’ ‘அருவாசண்ட’ திரைப்படங்களை எழுதி இயக்கிய ஆதிராஜனின் எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “நினைவெல்லாம் நீயடா”.இசைஞானி இளையராஜாவின் 1417வது திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார்.

நாயகனாக பிரஜன் நாயகியாக மனிஷா யாதவ் சினாமிகா யுவலட்சுமி ரெடின் கிங்ஸ்லி ரோஹித் மனோபாலா இயக்குனர் ஆர் வி உதயகுமார் மதுமிதா பி எல் தேனப்பன் முத்துராமன் ரஞ்சன் குமார் தீக்குச்சி தண்டபாணி உட்பட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் பிப்ரவரி 23ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது‌.

சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான எம் சசிகுமார் வெளியிட்ட இந்த திரைப்படத்தின் டீசரை ரசிகர்கள் அனைவராலும்  பாராட்டப்பட்டது.

திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இந்த ‘நினைவெல்லாம் நீயடா’ மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் மற்றும் டிரெய்லரை பார்த்து ரசித்து பாராட்டியிருக்கின்றனர் திரையுலக ஜாம்பவான்கள்.

குறிப்பாக திரைப்படத்தின் தரம் மற்றும் மேக்கிங் குறித்து அனைத்து பிரபலங்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவில் ஆசிஷ் படத்தொகுப்பில் முனிகிருஷ்ணன் கலை வடிவமைப்பில் பிரதீப் தினேஷ் மாஸ்டரின் சண்டை காட்சியமைப்பில் தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்களின் நடன அமைப்பில் கவிஞர்கள் இளையராஜா பழநிபாரதி சினேகன் பாடல் வரிகளில் முதல் காதல் முழுமையாக செழுமையாக செதுக்கப்பட்டுள்ளது.

“நினைவெல்லாம் நீயடா” திரைப்படம் ஒரு உருக்கமான உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

நிச்சயம் இது காதலர்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் அவரே எழுதிய ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது இந்த திரைப்படத்தின் சிறப்பு.

பள்ளிப் பருவத்தில் ஏற்படும் முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மறக்காது என்பது தான் இந்த படத்தின் மையக்கரு.

திரைப்படம் பார்த்ததும் ஒரு முறை நாம் படித்த பள்ளிக்கூடத்தை சென்று பார்த்துவிட்டு வருவோம் என்ற எண்ணம் உருவாவதை தடுக்க முடியாது.

க்ளைமாக்ஸ் காட்சியில் உங்கள் கண்கள் மட்டுமல்ல இதயமும் ஈரமாகும்'” என்று அடித்துச் சொல்கிறார் இயக்குநர் ஆதிராஜன்.

இந்த திரைபடத்தை தமிழ்நாடு முழுவதும் ஜம்பாரா என்டர்டைன்மெண்ட் சார்பில் தர்மராஜ் வேலுச்சாமி வெளியிடுகிறார்