இயக்குநர் எஸ் பி ஜனநாதன் திடீர் உடல் நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை 12 மார்ச் 2021
2003 ல் இயற்கை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் எஸ் பி ஜனநாதன்.
அதை தொடர்ந்து ஜீவா நடித்த ‘ஈ’, ஜெயம்ரவி நடித்த ‘பேராண்மை’, ‘பூலோகம்’ விஜய் சேதுபதி மற்றும் அரியா நடித்த புறம்போக்கு போன்ற படங்களை தந்தவர்.
தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இருவரையும வைத்து ‘லாபம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இயக்குநர் எஸ் பி ஜனநாதன் ‘லாபம்’ திரைப்படத்தின் எடிட்டிங் வேலைகள் நேற்று மும்முரமாக நடந்துகொண்டிருந்த போது மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றவர் மாலை 3 மணியாகியும் இயக்குநர் எஸ் பி ஜனநாதன்
திரும்பி வராததால் அவரை தேடி அவரது உதவியாளர் எஸ் பி ஜனநாதன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு வீட்டின் மெயின் கேட் திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்த உதவியாளர் அங்கு இயக்குனர் எஸ் பி ஜனநாதன் மூச்சி பேச்சி இல்லாமல் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்கள் அமீர் மற்றும் கரு பழனியப்பன் ஆகியோர் மருத்துவமனைக்கு விஜயம் செய்தனர்.
இயக்குநர் ஜனநாதன் ஐ.சி.யுவில் இருந்ததால் பார்க்க அவர்களை அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.
பின்னர் நடிகர் விஜய் சேதுபதி மட்டும் ஜனநாதனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.
மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக திரை வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.