பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.!

சென்னை 05 பிப்ரவரி 2023 பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.!

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.

தற்போது அவருக்கு வயது 68.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குநர்கள் பாலச்சந்தர், விசு ராம நாராயணன் உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் சுமார் 60-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக டிபி கஜேந்திரன் பணியாற்றியுள்ளார்

தமிழ் திரைப்பட உலகில் கடந்த 1988-ஆம் வருடம் இயக்குனர் விசு மற்றும் கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான வீடு மனைவி மக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் டிபி கஜேந்திரன்.

1988 கன்டே மனே மக்களு  கன்னடத்தில் திரைப்படத்தை இயக்கினார்.

அதை தொடர்ந்து,1988 எங்க ஊரு காவல்காரன்,
1989 பாண்டிய நாட்டுத் தங்கம்  1989 எங்க ஊரு மாப்பிள்ளை 1989 தாயா தாரமா
1989 நல்ல காலம் பொறந்தாச்சு 1990 பெண்கள் வீட்டின் கண்கள் 1993 கொஞ்சம் கிளி
1995 பாட்டு வாத்தியார்
1997 பாசமுள்ள பாண்டியரே
2000 பட்ஜெட் பத்மநாபன்
2001 மிடில் கிளாஸ் மாதவன்
2003 பந்தா பரமசிவம்
2007 சீனா தானா

அவர் கடைசியாக
2010 ஆம் வருடம் மகனே என் மருமகனே திரைப்படத்தை இயக்கினார்.

இயக்குனர் டி.பி. கஜேந்திரன் 1985ஆம் வருடம் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த புதிய சகாப்தம் திரைப்படத்தில்  இயக்குனர் விசு அவர்களால் நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன்பின் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக இருந்த இயக்குனர் டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

தமிழக முதல்வர் க.ஸ்டாலினும், இயக்குனர் டிபி கஜேந்திரனும், விவேகானந்தா கல்லூரியில் பியூசி ஒன்றாக படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் இறப்புக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.