டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி’ தமிழ் நாட்டின் புதிய திரை உங்கள் சொந்த திரை.

சென்னை : 23 அக்டோபர் 2020

‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி’ தமிழ் நாட்டின் புதிய திரை உங்கள் சொந்த திரை

‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி’ தமிழர்களின் அடுத்த தலைமுறையின்  தனிப்பட்ட சொந்த  திரையாக உருமாறுகிறது.

பிரத்தியேக தமிழ் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோக்கள் மற்றும் கோலிவுட் திரைப்படங்கள், வெள்ளித்திரையில் வருவதற்கு முன்பே  நேயர்கள் ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி’ யில் கண்டு மகிழலாம்.

லைவ் கிரிக்கெட் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு   முன்னதாகவே பிரபலமான ஸ்டார் விஜய் நிகழ்ச்சிகளை காணும் வரிசையில் இது இணைகிறது!

‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி’ 4 புத்தம் புதிய நிகழ்ச்சிகளின் முதல் போஸ்டர்களை வெளியிட்டது.

பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் காஜல் அகர்வால், தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளர் .

தீபாவளி வெளியீடாக நயன்தாரா மற்றும் RJ பாலாஜி நடித்த புத்தம் புதிய பிளாக் பாஸ்டர் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தையும் ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி’  யில்  கண்டு மகிழலாம்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி தமிழ்நாட்டின்

தமிழ் நாட்டின் புதிய திரை உங்கள் சொந்த திரையாக மாற உள்ளது.

லட்சோப லட்ச நேயர்களின் அபிமான திரைப்படங்களையும் வெப் சீரீஸ்களையும் உள்ளங்கையில் காணும் வசதியுடன் அறிமுகம் செய்கிறது.

தமிழ் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் புதிய நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் தியேட்டரில்  வெளியிடுவதற்கு முன்பாகவே வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை மூலம்  இன்று தமிழ் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோக்கள் மற்றும் திரைப்படங்களை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி யில் காணும் வசதியை அறிவித்துள்ளது.

லைவ் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது டிவிக்கு முன்பே  பிரபலமான ஸ்டார் விஜய் நிகழ்ச்சிகளை  வழங்குவதோடு கூடுதலாக தரமான தமிழ் வெப் சீரிஸ் மற்றும் சிறப்பு திரைப்படங்களை காணும் தளமாக அமைகிறது.

இந்த தீபாவளியைத் தொடர்ந்து கோலிவுட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்கள் இடம்பெறும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான கதைகளுக்கு ரசிகர்கள் தயாராகுங்கள்.

இதில் முதன்முதலில் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படம் மூக்குத்தி அம்மன் திரைவெளியிடப்படும்.

பிரத்தியேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோக்களைத் ஒளிபரப்பவும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது .

வெங்கட் பிரபு இயக்கிய காஜல் அகர்வால் நடித்த லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் யும் காணலாம்.

மேலும் பிரபல  நடிகர்களான சத்தியராஜ் மற்றும் சீதா நடித்த மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்;  கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள டிரிபிள்ஸ் தமன்னா நடித்துள்ள ‘நவம்பர் ஸ்டோரி’ ஆகியவை ரசிகர்களின் ரசனையை அறிந்து தயாரிக்கப்பட்ட கதைகளாகும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி கூடுதலாக ஒரு வருடத்திற்குள் மேலும் பல திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த சூப்பர் ஹீரோ மற்றும் அனிமேஷன் திரைப்படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட உலகின் சிறந்த திரைப்படங்களை டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டார் விஐபி வழங்குகிறது.

பிக் பாஸ் தமிழ் மற்றும் பிரபலமான ஸ்டார் விஜய் நிகழ்ச்சிகளுக்கான தளமாகவும் பொழுதுபோக்கு சேவையை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் தலைவர் மற்றும்  ப்ரெசிடெண்ட்  திரு.  சுனில் ராயன் கூறுகையில், “இந்தியாவில் புத்தம் புதிய உத்வேகத்தை  கண்டுபிடிப்பதில் மற்றும் மறுவடிவமைப்பதில் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருக்கிறோம்.

தமிழ் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் உண்மையான கதைகளை வழங்குவதற்கான அடித்தளத்தை நாங்கள் அமைப்பதால் தொழில்துறையின் மிகச் சிறந்தவரிகளுடன் கூட்டாளர்களாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புதிய திரைப்படங்கள் தியேட்டர் மற்றும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் நிகழ்ச்சிகளின் அறிமுகத்தை நாங்கள் அறிவிக்கையில், ஸ்டார் விஜய் நிகழ்ச்சிகளுக்கு  மற்றும்  லைவ் ஸ்போர்ட்ஸ் முழுவதும் சிறந்த தமிழ் பொழுதுபோக்குகளை வழங்குவதற்கான எங்கள் தற்போதைய வாக்குறுதியைச் சேர்த்துக் கொள்கிறோம்.

எங்கள் பார்வையாளர்களுக்கு பரந்த சேவை வரிசையை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு; லைவ் டெலிகாஸ்டுடன் தனது டிஜிட்டல் துறை இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்.

ஒரு நல்ல சினிமாவை ஒன்றாக இணைப்பதை விட நிகழ்ச்சிகளை உருவாக்குவது எளிதானது என்று பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள் ஆனால் இது முற்றிலும் நேர்மாறானது.

ஆம், நான் எனது கம்ப்ர்ட் zone நில் இருந்து வெளிவந்து முற்றிலும் புதிய மற்றும் சவாலான ஒன்றை முயற்சித்துள்ளேன்.

புதிய மற்றும் அற்புதமான கதைகளத்துடன், தனித்துவமான கருத்துடன் ஒரு நிகழ்ச்சியை வழங்கப் போகிறேன்.

அங்கு பரிச்சயம் அல்லாத பார்வையாளரும் கூட நிகழ்ச்சியுடன் ஈடுபடத் தொடங்குவார்.

லைவ் டெலிகாஸ்ட் என்பது ஒரு ஹாரர் அனுபவத்தை  அனைவருக்கும் மெய்சிலிர்ப்பூட்டும் வகையில் வழங்கும்.

ஒரு  திகில் அனுபவத்தை உணர்வீர்கள். மேலும் இந்த நிகழ்ச்சி மற்ற 6 மொழிகளிலும் வெளியிடப்படும் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி மூலம் இந்த கதை நாடு முழுவதும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சென்றடையும் என்று நான் நம்புகிறேன் ”

நவம்பர் ஸ்டோரி என்ற தலைப்பில் தமன்னா நடித்துள்ள சீரிஸ் பற்றி கூறுகையில்.

“இந்த அசாதாரண காலங்களில், மக்கள் முன்பை விட ஆறுதலுக்காக பொழுதுபோக்கிற்கு திரும்பியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.

இது போன்ற ஒரு அறிவிப்புக்காக கோலிவுட் ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்கிறார்கள்.

இது ஒரு பட்டனை தட்டினால் கிடைக்கும் வரப்பிரசாதம் ஆகும்.  உலகத் தரம் வாய்ந்த தமிழ் பொழுதுபோக்குக்கு உறுதியளிக்கிறது.

டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டார் விஐபியுடன் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இது அனைத்து கோலி-ரசிகர்களுக்கும் சாத்தியமாக்குகிறது.

எனது நிகழ்ச்சி நவம்பர் ஸ்டோரி ஒரு வலுவான பெண் சார்ந்த கதை, இது கதாபாத்திரத்துடன் சுற்றி நடிக்க எனக்கு வாய்ப்பளித்தது” என்றார்.

மை பெர்பெக்ட் ஹஸ்பண்டில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ், “நல்ல நிகழ்ச்சிகள் மக்களை புதிய இடத்திற்கு கொண்டு செல்லும் திறனைக் கொண்டுள்ளது.

மை பெர்பெக்ட் ஹஸ்பண்டில் உங்களை ஒரு நல்ல மகிழ்ச்சியான உணர்விற்கு அழைத்துச்செல்லும் கதைக்களமாகும்.

இது வயதான காலத்தில் அன்பைக் தேடும் கதைக்கு மாறுபட்டது.

காண்பவர்களின் முகத்தில் புன்னகை வரவைக்கும் ஒரு அற்புதமான கதையாக இருக்கும்’ என்றார்.

டிரிபிள்ஸை இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்பராஜ் மேலும் கூறுகையில்,

மக்கள் பொழுது போக்குகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதில் ஒரு தெளிவான மாற்றம் உள்ளது மற்றும் டிஜிட்டல் என்பது அந்த இயக்கத்தின் ஒரு பெரிய பகுதியாகும்,

இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி டிரிபிள்ஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியைத் தொடங்க சரியான தளமாக மாற்றுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆல்ரவுண்ட் எண்டர்டெய்னரின் அனைத்து கூறுகளும் உள்ளன.

அதிரடி, நாடகம், நகைச்சுவை மற்றும் பல பார்வையாளர்களை கடைசி வரை சிரிக்க வைக்கும் ”

தீபாவளி வெயீடான  மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் போஸ்ட்டரை  வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி, “சிறந்த திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்க முடிந்ததில் கிடைத்த மகிழ்ச்சியை விட வேறு எதுவும் இல்லை.

மூக்குத்தி அம்மன் போன்ற ஒரு படம்,  மக்களுடன் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்.

எந்தவொரு புதிய திரைப்பட வெளியீடுகளும் இல்லாமல் தீபாவளி முழுமையடையாது, அதுவும் இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி தேவை, இந்த பண்டிகை காலங்களில் எங்கள் படம் அந்த மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் கொண்டு வரும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபியில் தீபாவளி ஸ்பெஷலாக தீபாவளி பிளாக்பஸ்டராக மூக்குத்தி அம்மன்  வெளியிடப்பட உள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது உண்மையிலேயே கோலிவுட்டின் ஹோம்  டெலிவரி ”

கோலிவுட்டின்  ஹோம் டெலிவரி திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் விவரம்.

மூக்குத்தி அம்மன் : (பக்தி மற்றும் குடும்பம்) – நயன்தாரா , ஆர் ஜெ பாலாஜி

லைவ் டெலிகாஸ்ட் : (ஹாரர்) காஜல் அகர்வால் , வைபவ், ஆனந்தி, இயக்கம் வெங்கட் பிரபு.

மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட் : (குடும்பம்) ; சத்யராஜ் – சீதா

ட்ரிபிள்ஸ்: (காமெடி) ஜெய், வாணி போஜன். தயாரிப்பு கார்த்திக் சுப்புராஜ்

நவம்பர் ஸ்டோரி : (கிரைம்) ; தமன்னா

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உலகின் சிறந்த கதைகள் ஒரே மேடையில் ஒன்றிணைந்த பயனர்களுக்கு ஒப்பிடமுடியாத பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டார் விஐபி பயனர்களின் வருடாந்திர சந்தா மூலம் தங்களுக்கு பிடித்த பிக் பாஸ் தமிழ் மற்றும் பிற பிரபலமான ஸ்டார் விஜய் நிகழ்ச்சிகளை டிவிக்கு முன் காணலாம்.

சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் (அவென்ஜர்ஸ்: எண்ட் கேம், அயர்ன் மேன்), சமீபத்திய அனிமேஷன் படங்கள் ( frozen 2, தி லயன் கிரோசான் ), குழந்தைகளுக்கு பிடித்த கதாபாத்திரங்கள் ( மிக்கி மவுஸ், டோரமன்), பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள் ஏழு மொழிகளில் மிகவும் பிரபலமான நீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் ஓப்ஸ், ஆர்யா, தமிழ் வர்ணனையுடன்   ஐபிஎல் 2020 போன்ற லைவ் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு  399 / – ரூபாய் மட்டுமே!

கோலிவுட்டின் ஹாம் டெலிவரி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு  தயாராகுங்கள், இந்த தீபாவளியை டிஸ்னி பிளஸ் விஐபியில் மட்டுமே கண்டுகளியுங்கள்