தளபதி 65 திரைப்படத்தை இயக்கும் இயக்குநருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.?

சென்னை : 17 டிசம்பர் 2020

தமிழ் திரைப்பட உலகில் ரசிகர்களால் இப்போது அதிகம் பேசப்படும் திரைப்படமாக தளபதி 65 இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இருந்து வருகின்றனர்.

தான் இயக்கிய ஒரே ஒரு படம் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருக்கும் தளபதி விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

இத்தனைக்கும் இந்த திரைப்படத்தை இயக்க இருந்த இயக்குனர் முருகதாஸ் வெளியேறிய பின்னர் அவர் இடத்தை நிரப்ப தளபதியால் சன் தொலைக்காட்சியாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்துக்காக நெல்சனு திலிப் குமாருக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள நெல்சன் திலிப் குமாருக்கு சன் பிக்சர்ஸ் இந்த தளபதி 65 திரைப்படத்துக்கு 6 கோடி ரூபாய் என சம்பளம் ஒப்பந்தம் செய்துள்ளதாம்.