டிஎஸ்பி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5

நடிகர் நடிகைகள் :- விஜயசேதுபதி, அனு க்ரீத்தி வாஸ்,பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், சிங்கம் புலி, தீபா, ஆதிரா பாண்டிலக்ஷிமி, செந்தில், டி.எம்.கார்த்திக், ஷிவானி நாராயணன், விசாலினி, சாயா தேவி, லிங்கம், கஜராஜ், ரகு ஆதித்யா, அனிஷ் அனிஷ் குருவில்லா விமல், ஜார்ஜ் மரியம்,
கலைவாணி, வஸ்வதத்தா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பொன்ராம்.

ஒளிப்பதிவு :- தினேஷ் கிருஷ்ணன் பி & வெங்கடேஷ் எஸ்.

படத்தொகுப்பு :- விவேக் ஹர்ஷன்.

இசை :- டி.இம்மான்.

தயாரிப்பு :- ஸடேன் பென்ச் பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- கார்த்திகேயன் சந்தானம்.

ரேட்டிங் :- 2.75 / 5

நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் முதல் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைந்ததால் இந்த திரைப்படத்தின் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

சேதுபதி, செக்க சிவந்த வானம் தினைப்படங்களை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள DSP திரைப்படம் இன்று திரையில் வெளியாகிவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி தந்தையான இளவரசு பூ வியாபாரம் செய்து வருகிறார்.

தந்தை இளவரசு தனது மகன் கதாநாயகன் விஜய் சேதுபதியை அரசாங்க வேலைகயில் மட்டுமே சேரவேண்டும் என்று தனது தந்தை ஆசைப்படுவதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அதே ஊரில் கல்லூரியில் படிக்கும் கதாநாயகி அனுகீர்த்தியுடன் விஜய் சேதுபதிக்கு பழக்கம் ஏற்படுகிறது.

ஒரு நாள் எக்ஸாமுக்கு கிளம்பும் போது வாழ்த்துக்கள் மருந்து வீட்டில் வைத்து விட்டு வருகிறாள்.

அப்போது கதாநாயகன் விஜய் சேதுபதியின் பைக்கில் ஏறி வீட்டில் இருந்து ஹால் டிக்கெட் எடுத்துக் கொண்டு கல்லூரியில் வந்து இறங்குகிறார்.

அந்தப் பழக்கம் நாளடைவில் இது காதலாக மாறுகிறது.

கதாநாயகன் விஜய் சேதுபதியின் தங்கைக்கு தனது நண்பனுடன் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடக்கிறது.

சென்னையில் இருந்து கதாநாயகன் விஜய் சேதுபதியின் நண்பர்கள் திண்டுக்கல்லுக்கு வருகிறார்கள்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் ஊரில் தாதாவாக வாழ்ந்து வரும் நெட்ல இல்ல வில்லன் பிரபாகருக்கும் அடிதடி தகராறு ஏற்படுகிறது.

இந்த தகராறில் கதாநாயகன் விஜய் சேதுபதி வில்லன் பிரபாகரனை மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து விடுகிறார்.

இதனால் கோபமடையும் வில்லன் பிரபாகர், கதாநாயகன் விஜய் சேதுபதியை கொன்றே தீருவேன் என்று முடிவெடுக்கிறார்.

தனது தங்கையின் திருமணத்திற்காக ஒதுங்கி மறைந்து வாழும் கதாநாயகன் விஜய் சேதுபதி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு டி.எஸ்.பி.யாக வருகிறார்.

இறுதியில் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கும், கொன்றே தீருவேன் என வில்லன் பிரபாகர் சவால் விடுகிறார் அந்த சவால் ஜெயித்தது யார் என்பதுதான் இந்த டிஎஸ்பி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டிஎஸ்பி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகை விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிக அருமையாக இருக்கிறார்.

எந்த ஒரு கதாபாத்திரங்களை கொடுத்தாலும் அதை மிகவும் சிறப்பாக செய்து காண்பித்து விடுவார்.

விஜய் சேதுபதி, இந்த திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து கமர்ஷியல் கதாநாயகனாக பளிச்சிடுகிறார்.

தனக்கே உரிய பாணியில் நக்கல், நையாண்டி, உடல் மொழி என அசத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த டிஎஸ்பி திரைப்படத்தின் கதாநாயகியாக புதுமுக நடிகை அனு கீர்த்தி நடித்துள்ளார்.

கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் அனு கீர்த்தி, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதியுடன் பேசும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் ஷிவானி கொடுத்த வேலையை மிகவும் அருமையாக செய்து இருக்கிறார்.

ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார் புகழ்.

வில்லத்தனத்தில் மிக அசால்டாக மிரட்டியிருக்கிறார் பிரபாகர்.

கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு இணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் பிரபாகர்.

கதாநாயகன் விஜய் சேதுபதியின் தந்தையாக நடித்துள்ள இளவரசுவின் நடிப்பு மிக மிக சிறப்பு.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம்.

அனைத்து கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் பெண் ராம்.

டி. இமான் இசையில் உருவாகி இருக்கும் அட்வைஸ், மற்றும் திருமண பாடல் தாளம் போட வைக்கிறது.

பின்னணி இசை அருமையாக உள்ளது.

மற்றும் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

கமர்சியல் திரைப்படத்திற்கு என்ன தேவையோ அனைத்து அம்சங்களையும் நிறைய வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.

காமெடி, ஆக்ஷன் சென்டிமென்ட் என திரைக்கதையில் சுவாரசியத்தை சேர்த்து இருக்கிறார் இயக்குனர் பெண்ராம்.

மொத்தத்தில் டி.எஸ்.பி திரைப்படம் ரசிக்கலாம்.