இமெயில் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அசோக் குமார், ராகினி திவேதி, அதவ் பாலாஜி, பேல்லி முரளி, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், ஆரத்தி ஸ்ரீ, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எஸ் ஆர் ராஜன்.

ஒளிப்பதிவாளர் :- செல்வம் மாதப்பன்.

படத்தொகுப்பாளர் :- ராஜேஷ்குமார்.

இசையமைப்பாளர் :- கவாஸ்கர் அவினாஷ் ஜூபின்.

தயாரிப்பு நிறுவனம் :- எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி.

தயாரிப்பாளர் :- எஸ் ஆர் ராஜன்.

கதாநாயகன் அசோக்குமார் மற்றும் கதாநாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆன்லைன் கேம் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள கதாநாயகி ராகினி திவேதி அந்த ஆன்லைன் கேம் விளையாட்டிற்கு அடிமையாகி விடுகிறார்.

ஒரு கட்டத்தில் ஆன்லைன் விளையாட்டில் கதாநாயகி ராகினி திவேதி ஒரு பிரச்சனை ஏற்பட்டு மிகப்பெரிய சிக்கலில் சிக்கி விடுகிறார்.

தன்னுடைய மனைவி கதாநாயகி ராகினி திவேதியை அந்த பிரச்சனை இருந்து காப்பாற்ற கதாநாயகன் அசோக்குமார் முயற்சி செய்கிறார்.

தன்னுடைய மனைவி கதாநாயகி ராகினி திவேதி காப்பாற்ற கதாநாயகன் அசோக்குமார் முயற்சி செய்யும் சமயத்தில் அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

இதனால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட கதாநாயகி ராகினி திவேதி களத்தில் இறங்கி தீர்வு காண முடிவெடுக்கிறார்.

இறுதியில் தன்னுடைய பிரச்சனைகள் இருந்து கதாநாயகி ராகினி திவேதி மீண்டாரா? மீளவில்லையா? கதாநாயகன் அசோக் குமாரை கதாநாயகி ராகினி திவேதி காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த இமெயில் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த இமெயில் திரைப்படத்தில் கதாநாயகனாக முருகா அசோக் குமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அசோக்குமார், குறைவான காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், கொடுக்கப்பட்டிருந்த காட்சிகளில் அதிக அளவில் நடித்திருக்கிறார்.

இந்த இமெயில் திரைப்படத்தில் கதாநாயகியாக ராகினி திவேதி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ராகினி திவேதியின் முகம் அவருடைய முதிர்ச்சியை காட்டினாலும், நடிப்பில் மிகவும் இளமையாகவே இருக்கிறார்.

காதல் காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ என மற்ற கதாபாத்திரங்களில்  நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

மறைத்த நடிகர் மனோ பாலாவின் காமெடி காட்சிகள் மற்றும் ஒரு காட்சியில் வந்தாலும் லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு திரைப்படத்தை மிகவும் கலர்புல்லாக காண்பித்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

ஆன்லைன் கேம் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளையும் பாதிப்புகளையும் கொஞ்சம் தெளிவாக திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கலாம்..

ஆன்லைன் கேம் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்திய கதையை சஸ்பென்ஸாகவும், யூகிக்க முடியாத பல திருப்பங்களுடனும் சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன்.

மொத்தத்தில், இந்த ‘இ-மெயில்’ திரைப்படம் ரசிகர்களை ஆன்லைன் கேம் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளையும் எச்சரிக்கவும் செய்கிறது.