பிரபல காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.!

சென்னை 19 பிப்ரவரி 2023 பிரபல காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவருக்கு தற்போது வயது 57.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த நடிகர் மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தமிழில் பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி.

இறுதிச் சடங்குகள நாளை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர் தீவிரமான சிவன் பக்தர்  அண்ணாமலையார் என்றால் இவருக்கு உயிர் அதனால் சிவராத்திரி அன்று காலமாகி இருக்கிறார்

இவர் கடந்த தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில்  எம்எல்ஏவுக்கு சுயேச்சையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.