பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாசின் தாயார் காலமானார்.
சென்னை 25 ஆகஸ்ட் 2022 பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாசின் தாயார் காலமானார்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாஷ் தமிழ் திரைப்பட உலகில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன், அஜித் குமார் நடித்த ஜனா, ஆர் கே நடுத்தஎல்லாம் அவன் செயல், என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.
இவரது தாயார் ஜானகி எஸ் நாயர் (88) இன்று காலை காலமானார்.
இன்று காலை கப்பா என்ற திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இருந்த இயக்குனர் ஷாஜி கைலாஸ் தனது தாயின் மரணம் குறித்து அறிந்தார்.
உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இயக்குனர் ஷாஜி கைலாஸ் மற்றும் படக்குழுவினர் குக்கன்கோணத்தில் உள்ள வீட்டிற்கு விரைந்து வந்தனர்.
ஜானகியம்மாவின் மறைவுக்கு மலையாள திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அஞ்சலி செலுத்தியது.
மலையாள திரைப்பட உலகில் உள்ள பிரபலங்கள் வீட்டுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.