பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி கொரோனா தொற்று காரணமா மருத்துவமனையில் அனுமதி.

சென்னை 13 மே 2021

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி கொரோனா தொற்று காரணமா
மருத்துவமனையில் அனுமதி.

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நடிகர் டேனியல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிகின்றவர்.

வடசென்னை, பிகில் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.